ETV Bharat / sitara

ராஜமெளலிக்கு வாழ்த்தினைச் சொல்... உயர உயர மண்பார்த்து நட... மகனை வாழ்த்திய கவிப்பேரரசு...

author img

By

Published : Mar 21, 2022, 10:31 AM IST

இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்படத்திற்கு தமிழ் வரிகள் எழுதிய மதன் கார்க்கிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.

vairamuthu-tweet-for-his-son-madhan-karky-on-rrr-movie-release
vairamuthu-tweet-for-his-son-madhan-karky-on-rrr-movie-release

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் வெற்றிபெற இந்திய திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது வாழ்த்தினை தெரிவித்தார். இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மகனே மதன்கார்க்கி!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில்

நீ உரையாடலும் பாடலும்

தீட்டியிருப்பது மகிழ்ச்சி

பெரும்படைப்பில்

பங்குபெறுவது பெருமிதம்

ஓர்

அனுபவத்தை மறக்காதே!

ஒரு படைப்பில்

உழைப்பை நிறைவாகக் கொடு

வெற்றியில் குறைவாக எடு

ராஜமெளலிக்கு

என் வாழ்த்தினைச் சொல்

உயர உயர

மண்பார்த்து நட... என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பதவிகள் அனைத்தும் பாண்டவர் அணிக்கே - வெளியானது நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.