ETV Bharat / sitara

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? - வைரமுத்து

author img

By

Published : Dec 31, 2019, 2:21 PM IST

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

Vaiaramuthu
Vaiaramuthu

கவிஞர் வைரமுத்துவின் சாதனைகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருந்தார். இதனிடையே, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்ததை அடுத்து திடீரென கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

  • The Defence Minister of India is conferring an honorary degree to Kavignar Vairamuthy named by 9 women so far for having molested them.

    Just reiterating - outing KNOWN molesters does NO damage to them. Instead I got banned from working.

    1/3 pic.twitter.com/AbAExIAwbA

    — Chinmayi Sripaada (@Chinmayi) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து வேறொரு நாளில் வைரமுத்துவுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என கல்வி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், தனக்காக குரல்கொடுத்த அனைவருக்கும் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'எனக்காகக் குரல்கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றும் தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.

  • எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.
    இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?

    — வைரமுத்து (@vairamuthu) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

பொம்மையுடன் ரொமான்ஸ் செய்யும் எஸ். ஜே. சூர்யா

Intro:Body:

எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.