ETV Bharat / sitara

'டார்ச் லைட்' உடையணிந்து நெட்டிசன்களை குஷிப்படுத்திய பூனம் பாண்டே!

author img

By

Published : May 19, 2020, 8:29 PM IST

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே டார்ச் லைட்டை மட்டுமே உடையாக அணிந்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

poonam pandey
poonam pandey

தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் ஒருசில படங்களில் மட்டும் நடித்தவர் பூனம் பாண்டே. இவர் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானதைவிட சமூகவலைதளத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி படங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானர்.

நாடு முழுவதும் அமலில் இருக்கும் கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாலும் அவ்வப்போது பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளன. அந்த வகையில், பூனம் பாண்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமூகவலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த பூனம் பாண்டே, 'லவ் ரோபோட்' என்ற தலைப்பில் ஆடை இல்லாமல் முழு நிர்வாண வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இருட்டில் ஆடை இல்லாமல் இருக்கும் பூனம் பாண்டே ஒரு டார்ச் லைட்டின் வெளிச்சத்தின் மூலம் தனது நிர்வாணத்தை காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பூனம் பாண்டே முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமென்றால் தனது இணைய தளத்திற்கு வாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒருபுறம் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் வரவேற்பு அளித்தாலும் மறுபுறம் தன்னை நிர்வாணமாக்கி பணம் சம்பாதிக்கும் பூனம் பாண்டேவின் செயல் மிகவும் மோசமானது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கரோனா ஊரடங்கால் சமூகவலைதளத்தில் 'பில்லோ சேலஞ்', 'நியூஸ்பேப்பர் சேலஞ்ச்' உள்ளிட்டவைகள் நெட்டிசன்களிடையே பிரபலமான நிலையில், தற்போது பூனம் பாண்டேவின் இந்த 'டார்ச் லைட்' உடை நெட்டிசன்களிடையே கிறக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.