ETV Bharat / sitara

ராதாரவிக்கு எதிராக களமிறங்கிய சின்மயி

author img

By

Published : Jan 30, 2020, 5:05 PM IST

'ராம‌ராஜ்ய‌ம் அணி' சார்பில் தனது ஆதரவாளர்களுடன் டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பாடகி சின்மயி.

Singer Chinmayi files nomination agaisnt Radharavi
Radha ravi and chinmayi

சென்னை: டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் ராதாரவிக்கு எதிராக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் பாடகி சின்மயி.

டப்பிங் யூனியன் தேர்தல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போது தலைவர் பதவியில் இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார்.

இதையடுத்து அவருக்கு எதிராக தலைவர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பாடகி சின்மயி. இவர் 'ராம‌ராஜ்ய‌ம் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'மீ டு' விவகாரத்தில் சின்மயி கூறிய புகார்களை விமர்சித்த ராதாரவிக்கு எதிராக ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார் சின்மயி.

இதைத்தொடர்ந்து சந்தா தொகை செலுத்தவில்லை எனக் கூறி சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், நீதிமன்றம் மூலம் முறையிட்ட சின்மயி டப்பிங் யூனியனில் மீண்டும் இணைந்தார்.

தற்போது டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவிக்கும் எதிராக களமிறங்கியுள்ளார்.

Intro:Body:

Singer Chinmayi files nomination agaisnt Radharavi Chinmayi and Radharavi fight Chimayi contest dubbing union election 



ராதாரவிக்கு எதிராக போட்டியிடும் சின்மயி ராதாரவி சின்மயி விவகாரம்  டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிடும் சின்மயி


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.