ETV Bharat / sitara

'சில்லுக் கருப்பட்டி' படத்தில் நடித்த நடிகர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

author img

By

Published : Jan 23, 2021, 10:13 PM IST

'சில்லுக் கருப்பட்டி' திரைப்படத்தில் நடித்து நடிகர் ஶ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

sillu Karupatti Movie Actor Dies
sillu Karupatti Movie Actor Dies

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 2019 ஆண்டு வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. நான்கு வெவ்வேறு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீராம். க்ராவ் மகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையில் தேர்ந்தவரான இவர், தமிழ்நாடு காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

இந்ந நிலையில் இன்று (ஜன. 23) அவரது வீட்டு மாடியில் பயிற்சியில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க...குடியிருப்பில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட விஷ்ணு விஷால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.