ETV Bharat / sitara

சர்ச்சை இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸ்: கைகோர்த்த மக்கள் செல்வன்!

author img

By

Published : Aug 2, 2021, 7:15 AM IST

மும்பை: திஃபேமிலி மேன் இணையத்தொடர் இயக்குநர்களான ராஜ் - டிகே இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

f
f

டிஜிட்டல் தளமான ஓடிடி கலாச்சாரம் பொதுமக்களிடையே பிரபலமானதையடுத்து வெப் சீரிஸ்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாக பல முன்னணி திரைப்பிரபலங்கள் தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென்னிந்திய பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸில் நடித்தார். இலங்கைத் தமிழர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இந்தத் தொடரில் இடம் பெற்றிருந்தால், தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 'திஃபேமிலி மேன் சீரிஸ்' வெளியானது. இந்த சீரிஸை இரட்டை இயக்குநர்களான ராஜ் - டிகே இயக்கியிருந்தனர். தற்போது இவர் மீண்டும் புதிய வெப் சீரிஸை இயக்கவுள்ளனர்.

இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருடன் நடிகை ராஷி கண்ணா, நடிகர் ஷாஹித் கபூர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த சீரிஸின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி இந்தியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் 'மும்பைக்கார்' படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார்.

தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய 'திஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் தொடர் இயக்குநர்களுடன் விஜய் சேதுபதி கைகோர்த்துள்ளார். இந்த வெப் சீரிஸூம் ஏதேனும் சர்ச்சைகளில் சிக்குமான என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: 4 years of vikram vedha: ஒரு கத சொல்ட்டுமா சார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.