ETV Bharat / sitara

இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியிட தடை!

author img

By

Published : Jan 8, 2021, 12:17 PM IST

Updated : Jan 8, 2021, 12:52 PM IST

MHC order, actor Vijay master, மாஸ்டர் திரைப்படம், vijay in master
vijay in master

12:11 January 08

சென்னை: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC order, actor Vijay master, மாஸ்டர் திரைப்படம், vijay in master
சென்னை உயர் நீதிமன்றம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சய், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இச்சூழலில், இந்தப் படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், (seven screen studio) மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இனிதான் ஆட்டமே ஆரம்பம்: வெளியானது 'கேஜிஎஃப்-2' டீசர்!

மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், சட்டவிரோதமான இணையதளங்களில் மாஸ்டர் படத்தை வெளியிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடக் கூடாது எனவும் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், 400 சட்டவிரோத இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடைவிதித்து, இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Last Updated : Jan 8, 2021, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.