ETV Bharat / sitara

'அந்தாதுன்' ரீமேக்கில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்?

author img

By

Published : Jan 25, 2020, 11:44 AM IST

Updated : Jan 25, 2020, 1:02 PM IST

பாலிவுட்டில் மாபெரும் வெற்றிபெற்ற ஆயுஷ்மான் குரானாவின் 'அந்தாதுன்' திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ramya-krishnan
ramya-krishnan

பாலிவுட்டில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, அனில் தவான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'அந்தாதுன்'. இந்தப்படத்தை பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

ஒரு முன்னாள் திரைப்பட நடிகரின் கொலை மற்றும் கண்பார்வையற்ற ஒருவர், தன்னை அறியாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் திரில் நிறைந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்ததோடு, சிறந்த படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றது.

Adhadhun
அந்தாதுன்

இந்த நிலையில், இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். ஆயுஷ்மான் குரானா நடித்த கண்பார்வையற்ற இளைஞர் கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார்.

தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்திற்கான நடிகை, பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதனிடையே 'அந்தாதுன்' படத்தில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ramya-krishnan
ரம்யா கிருஷ்ணன்

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் ஆகியோர் மும்பை சென்று 'அந்தாதுன்' படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

‘துப்பாக்கி’ பட வில்லனின் 'குதா ஹாஃபிஸ்' - லக்னோவில் படப்பிடிப்பு

Intro:Body:

Tanya Ravichandran gallery


Conclusion:
Last Updated : Jan 25, 2020, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.