ETV Bharat / sitara

ரஜினி பிறந்தநாள்: மருந்தீஸ்வரர் கோயிலில் லாரன்ஸ் சிறப்பு வழிபாடு

author img

By

Published : Dec 12, 2019, 12:37 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு கோ பூஜை வழிபாடு மேற்கொண்டார்.

raghava-lawrence
raghava-lawrence

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை வேளச்சேரி கிழக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு கோபூஜை வழிபாடு நடத்தப்பட்டது.

கோ பூஜை வழிபாட்டில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், இயக்குனர் சாய்ரமணி மற்றும் ரஜினி ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அன்னதான நிகழ்வும் நடைபெறகிறது.

ரஜினியின் பிறந்தநாளையொட்டி, ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில் வீடியோ வாழ்த்து செய்தி ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க...

ரஜினி பேசும் அரசியல் - அதிசயம் நிகழுமா?

Intro:ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் வாழ்த்து.Body:வேளச்சேரி கிழக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் .கோவிலில் நடைபெற்றது. கோ பூஜை வழிபாட்டில் நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் சாய்ரமணி ஆகியோர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அன்னதான நிகழ்வும் நடைபெற உள்ளது .இதனை தொடர்ந்து ராகவா .Conclusion:லாரன்ஸ் இணையதளத்தில் வீடியோ வாழ்த்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.