ETV Bharat / sitara

பரியேறும் பெருமாள் இயக்குநருக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்!

author img

By

Published : Sep 14, 2019, 1:26 PM IST

புதுச்சேரி: அரசு சார்பில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட 'பரியேறும் பெருமாள்' பட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது வழங்கப்பட்டது.

maari selvaraj

புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை நவதர்ஷன் திரைப்படக் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோன்று 2018ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முருகா திரையரங்கில் 13ஆம் தேதி (நேற்று) முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பரியேறும் பெருமாள் இயக்குநருக்கு விருது

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் சிறந்த தமிழ் மொழி படமாகத் தேர்வானது. இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பங்கேற்று இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருதும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், புதுச்சேரி அரசு தன்னை பெருமைப்படுத்தியதற்கு நன்றி என்றும், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Intro:புதுச்சேரி அரசு சார்பில் பரியேறும் பெருமாள் படத்திற்கு சிறந்த படம் விருது இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு அமைச்சர் விருது வழங்கி கௌரவிப்பு.

விருது வழங்கிய அரசு தன்னைப் பெருமைப்படுத்திக் உள்ளது இயக்குனர் மாரி செல்வராஜ் பெருமிதம்


Body:புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் நவ தர்ஷன் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் ஆகியன இணைந்து புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தி வருகிறது இதன் மூலம் புதுச்சேரி பல்வேறு மொழிகள் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது இந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழி படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கும் விழா இன்று புதுச்சேரி முருகா திரையரங்கில் நடைபெற்றது விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பரியேறும்பெருமாள் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் அரசு சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது கேடயம் வழங்கினார் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து திரைப்படம் திரையிடப்பட்டது 17ஆம் தேதி வரை வங்க மொழி ,மலையாளம் ,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்கள் இலவசமாக திரையரங்கில் திரையிடப்பட உள்ளது

பின்னர் செய்தியாளர்களை திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ்

புதுச்சேரி அரசு தன்னை பெருமைப்படுத்தி உள்ளதாகவும் இவ்விருது தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் புதுச்சேரி அரசு சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதற்காக புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்


Conclusion:புதுச்சேரி அரசு சார்பில் பரியேறும் பெருமாள் படத்திற்கு சிறந்த படம் விருது இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு அமைச்சர் விருது வழங்கி கௌரவிப்பு.

விருது வழங்கிய அரசு தன்னைப் பெருமைப்படுத்திக் உள்ளது இயக்குனர் மாரி செல்வராஜ் பெருமிதம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.