ETV Bharat / sitara

மலைக்கள்ளன் - மக்கள் திலகம் பற்றிய சுவாரஸ்ய தகவல்

author img

By

Published : Jan 17, 2020, 5:10 PM IST

தமிழ்நாடு மக்களால் மக்கள் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் 103ஆவது பிறந்தநாள் இன்று, அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்...

Mgr 103
Mgr 103

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோது அவரது தீவிர ரசிகர் ஒருவருக்கு ‘மலைக்கள்ளன்’ படம் வெளியான சமயம் குழந்தை பிறந்துள்ளது. எம்.ஜி.ஆர் மீதுகொண்ட அன்பினால் அந்தக் குழந்தைக்கு மலைக்கள்ளன் என அந்த ரசிகர் பெயரிட்டுள்ளார். என்னதான் மலைக்கள்ளன் என குழந்தைக்கு பெயரிட்டாலும், தனது தலைவர் எம்.ஜி.ஆர் தன் குழந்தைக்கு பெயரிட வேண்டும் என அந்த ரசிகர் விரும்பியுள்ளார்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் கடந்த பின்பு, எம்.ஜி.ஆர் தன் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆவலில், குழந்தையை தூக்கிக்கொண்டு மக்கள் திலகத்தை பார்க்கச் சென்றிருக்கிறார். தினமும் எம்.ஜி.ஆர் வீட்டு வாசலில் மலைக்கள்ளனின் தந்தை காத்திருந்திருக்கிறார். இதை கவனித்த எம்.ஜி.ஆர், ஒருநாள் காரை நிறுத்தச் சொல்லி, யாருப்பா நீ தினமும் இங்க நிற்கிற, உனக்கு என்ன வேணும் என கேட்டிருக்கிறார். என் குழந்தைக்கு நீங்கதான் பெயர் வைக்கனும் என மலைக்கள்ளனின் தந்தை கூறியிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர், இத்தன வருஷமா என்னப்ப பேர் சொல்லி கூப்பிட்ட என வினவியுள்ளார். உங்க ‘மலைக்கள்ளன்’ படம் வெளியாகும்போது பிறந்ததால மலைக்கள்ளன்னு கூப்டுட்டு இருக்கோம் என அவர் கூறியிருக்கிறார்.

Mgr 103
Mgr 103

அடப்பாவி என கூறிவிட்டு, ஒரு 100 ரூபாயை கொடுத்து ஊருக்கு போய் சேருனு எம்.ஜி.ஆர் அனுப்பி வைத்திருக்கிறார். மலைக்கள்ளனின் தந்தை, அந்த 100 ரூபாயை செலவு செய்யாமல், தலைவர் கொடுத்த பணம் என ஃப்ரேம் பண்ணி வீட்டில் வைத்துக் கொள்கிறார். மலைக்கள்ளன் வளர்கிறான், +2வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைகிறான். மருத்துவ படிப்பில் சேர விரும்பிய மலைக்கள்ளனின் கனவு நிறைவேறவில்லை. அப்போது எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருந்தார்.

ஊரில் உள்ளவர்கள் எல்லாம் மலைக்கள்ளனின் தந்தையிடம், உனக்குதான் தலைவர (எம்.ஜி.ஆர்) தெரியுமே, உனக்கு அப்பவே 100 ரூபாய்லாம் கொடுத்தார்ல, அவரப் போய் பாருனு அறிவுரை வழங்குகியிருக்கிறார்கள். ஊர்காரர்களின் பேச்சைக் கேட்டு ஃபிரேம் பண்ணிய 100 ரூபாயுடன் மலைக்கள்ளனை கூட்டிக்கொண்டு சென்னை சென்றிருக்கிறார் மலைக்கள்ளனின் தந்தை.

Mgr 103
Mgr 103

எம்.ஜி.ஆர் வரும் வழியில் ஃபிரேம் பண்ணிய 100 ரூபாயை தூக்கிப் பிடித்தபடி மலைக்கள்ளன் நின்றிருக்கிறார். அந்த வழியாக சென்ற எம்.ஜி.ஆர் காரை நிறுத்தி மலைக்கள்ளன் என கூறியிருக்கிறார். மலைக்கள்ளனின் தந்தைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, தலைவர் இன்னும் தங்களை ஞாபகம் வைத்திருக்கிறார் என்று...

மலைக்கள்ளனையும் அவர் தந்தையையும் காரில் ஏறும்படி எம்ஜிஆர் கூறியுள்ளார். கார் கோட்டையை நோக்கி சென்றிருக்கிறது. அதற்குள்ளாக வந்த விஷயத்தை எம்ஜிஆர் காதில் போட்டு வைத்திருக்கிறார் மலைக்கள்ளனின் தந்தை. கோட்டைக்கு சென்றதும், தமிழ்நாடு மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் எதுவும் மிச்சமிருக்கிறதா என எம்ஜிஆர் வினவியுள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து சீட்டுகளும் முடிந்துவிட்டது. ஆனால் ஆந்திராவில் உள்ளது என சம்பந்தப்பட்ட அலுவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது ஆந்திரா முதலமைச்சராக இருந்தது எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரான என்டிஆர். அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசிய எம்ஜிஆர், மருத்துவ படிப்பிற்கான சீட்டு வேண்டும் என கேட்டிருக்கிறார். மறுபுறம் என்டிஆர் யாருக்கு என கேட்க, என் மகனுக்கு என எம்ஜிஆர் கூறியிருக்கிறார். மலைக்கள்ளனின் தந்தைக்கு பிறவிப்பயனை அடைந்துவிட்டது போல் தோன்றியிருக்கிறது.

Mgr 103
Mgr 103

பையன அனுப்பிவிடுங்க நானே மொத்த மருத்துவ படிப்பு செலவையும் பார்த்துக்குறேன் என என்டிஆர் கூறியிருக்கிறார். மலைக்கள்ளன் ஆந்திரா சென்று சிறப்பாக தனது படிப்பை முடிக்கிறார். எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கை ஒருபுறம் போய்க்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாமல் இறுதி நாட்களில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு எம்ஜிஆருக்கு மருத்துவம் பார்த்த சிறப்பு மருத்துவக் குழுவினரில் மலைக்கள்ளனும் முக்கியமான நபர், அவர் எம்ஜிஆரை அருகில் இருந்து பார்த்துக் கொண்டதாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு. இந்த செவிவழிச் செய்தியை எம்ஜிஆர் என்பதால் நம்பலாம் என்பார்கள். உதவி என்று வந்தவர்களுக்கு தட்டாமல் உதவி செய்யக் கூடியவர் எம்ஜிஆர் என்பார்கள். இன்று அவரது 103ஆவது பிறந்தநாள்....

Intro:Body:

mgr birthday story


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.