ETV Bharat / sitara

"மெஹந்தி சர்க்கஸ்" சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்!

author img

By

Published : Apr 11, 2019, 11:39 PM IST

'மெஹந்தி சர்க்கஸ்" படத்தை பார்த்த ஞானவேல் ராஜா, படம் நல்லாருக்கு என்று சொன்ன பிறகுதான் நான் உயிர்த்தெழுந்தேன் என இயக்குநர் சரவண ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மெஹந்தி சர்க்கஸ்


இயக்குநர் ராஜூ முருகன் எழுதிய கதை, வசனத்தில் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இப்படம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் ஈஸ்வரன், இயக்குநர் ராஜூமுருகன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வரன் பேசியதாவது, 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தப்படம் ஒரு காதல் காவியம். பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து மெஹந்தி சர்க்கஸ் படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார்தான். ஒரு படம் வெற்றி அடைய படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். இன்னும் பத்து வருடம் கழித்து பார்த்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

mehandi-circus
மெஹந்தி சர்க்கஸ்

மேலும் படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜன் பேசுகையில், எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்றுதான். என்னை சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி எனத் தெரிவித்தார். 'மெஹந்தி சர்க்கஸ்' படத்திற்கு கதை, வசனம் எழுதிய இயக்குநர் ராஜூமுருகன் தெரிவிக்கையில், இப்படம் தொடங்குவதற்கு துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் மற்றும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் கதை. தனது அண்ணனின் உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன் என கூறினார்.

இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது, எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளனர். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்து நல்லாருக்கு என்று சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன் என வியப்புடன் தெரிவித்தார்,

 சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் படம் "மெஹந்தி சர்க்கஸ்"

 ஸ்டியோ க்ரீன் தயாரிப்பிl. இயக்குனர் ராஜு முருகன் எழுதிய கதை வசனம் வசனத்தில் சரவண ராஜேந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் மெஹந்தி சர்க்கஸ். வரும் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் ஈஸ்வரன், ராஜூமுருகன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜாவின் அப்பா  ஈஸ்வரன் பேசியதாவது, 

இந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்" என்றார்.


இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, 

"மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும்  நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்" என்றார்


படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது,

"மீடியாவை எப்போதும் மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி கொடுக்கும். எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்

படத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசியதாவது, 

"இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது, 

எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன். என்றார்.
 




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.