ETV Bharat / sitara

என்னது மாநாடு படம் கொரியன் படத்தின் காப்பியா?

author img

By

Published : Oct 15, 2021, 7:31 PM IST

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம், A Day என்ற கொரியன் படத்தை போல் உள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மாநாடு
மாநாடு

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள, மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்தின் கதை 2017 ஆம் ஆண்டு Cho Sun Ho இயக்கத்தில் வெளியான A Day என்ற கொரியன் படத்தை போல் உள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் ட்ரெய்லரில் இடம்பெறும் காட்சிகளும், A Day படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாநாடு தயாரிப்பாளருக்கு கொரிய படக்குழுவினர், நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் உலா வருகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில், "எங்களுக்கு எதுவும் நோட்டீஸ் வரவில்லை என்றும், Time Loop முறை என்பது இண்டர்நேஷனல் கான்செப்ட்.. அப்படி இருக்கையில் பிரச்னை, ஆலோசனை எல்லாம் ஏன் வருகிறது.

ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தை வர விடாம செய்ய ஒரு கூட்டம் கிளப்புகிற இறுதி முயற்சி இது" என்றார். இந்தபுது சர்ச்சையால், மாநாடு படம் சொன்ன தேதியில் தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: விக்ரம் வேதா இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.