தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார். பிரமாண்டமாகத் தயாரிக்கப்படும் இப்படத்தை ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்றுவந்த நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
![rajini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-rajini-legend-saravanan-meet-script-7205221_24032021131501_2403f_1616571901_551.jpg)
இதனையடுத்து தற்போது சரவணன், ரஜினியைச் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. சென்னையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலேயே அண்ணாச்சியின் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுவருகிறதாம்.
அந்தச் சமயத்தில் இருவரும் சந்தித்துப் பேசிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.