ETV Bharat / sitara

2 வயது குழந்தையின் கடைசி தவிப்பை யாராலும் வார்த்தைகளால் கூற முடியாது - லதா ரஜினிகாந்த்

author img

By

Published : Oct 29, 2019, 6:19 PM IST

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் லதா ரஜினிகாந்த்.

Latha Rajinikanth

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இன்று லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இது மிக வருத்தமான தருணம். எது நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தோமோ, அது நடந்திருக்கிறது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை சுஜித் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கடினமாக உழைத்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி. இந்த விஷயத்தில் சாதி மதம் இனம் எதையும் பார்க்காமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிரார்த்தனை செய்தோம், அனைவரும் ஒன்று சேர்ந்த அந்தத் தருணத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது.

குழந்தைகளுக்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது. ஆனால் விபரீதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்பே இதனை செய்ய வேண்டும். அதிகாலையில் குழந்தை இறந்த செய்தியை முதன்முதலில் ரஜினியிடம் நான்தான் கூறினேன். மிகவும் வருத்தப்பட்டார். குழந்தைகளுக்கு தெரிந்ததெல்லாம் அன்பும் நம்பிக்கையும்தான், அதை நாம் கொடுக்கத் தவறிக்கொண்டேயிருக்கிறோம்.

State body for children அமைப்பைத் தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் கலந்துபேசுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குழந்தைகளின் பாதுகாப்புக்காக வேலை செய்ய வேண்டும்.

இரண்டு வயது குழந்தையின் கடைசி தவிப்பை யாராலும் வார்த்தைகளால் கூற முடியாது. இது தேவையில்லாத ஒரு உயிர் பலி, பெற்றோர் ஆழ்துளைக் கிணறுகளை மட்டும் மூடினால் நம்முடைய பணி முடிந்து விடாது, பாதுகாப்பு முறைகளை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

Intro:2 வயது குழந்தையின் கடைசி தவிப்பை யாராலும் வார்த்தைகளால் கூற முடியாது- லதா ரஜினிகாந்த்Body:சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இன்று லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது
இது மிக வருத்தமான தருணம். எது நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்த அது நடந்திருக்கிறது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை சுஜித் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். கடினமாக உழைத்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி . இந்த விசயத்தில் ஜாதி மதம் இனம் எதையும் பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்தோம் அனைவரும் ஒன்று சேர்ந்து தருணம் அது அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது குழந்தைகளுக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது ஆனால் விபரீதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னதாகவே இதனை செய்ய வேண்டும் . அதிகாலையில் இறந்த செய்தியை முதன் முதலில் நடிகர் ரஜினிகாந்திற்கு நான் தான் கூறினேன். மிகவும் வருத்தப்பட்டார்.குழந்தைகளுக்கு தெரிந்ததெல்லாம் அன்பும் நம்பிக்கையும் தான் அதை நாம் கொடுக்க தவறிக் கொண்டே இருக்கிறோம்.


State body for children அமைப்பை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கலந்து பேசுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படு வருகிறேன் . பொதுமக்கள் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து குழந்தைகளின் பாதுகாப்புக்காக வேலை செய்ய வேண்டும்.


இது ஒரு குழந்தையின் உயிர் 2 வயது குழந்தையின் கடைசி தவிப்பை யாராலும் வார்த்தைகளால் கூற முடியாது. இது தேவை இல்லாத ஒரு உயிர் பலி பெற்றோர்கள்

ஆழ்துளை கிணறு மட்டும் மூடினால் நம்முடைய பணி முடிந்து விடாது, இன்று ஆழ்துளை கிணறு நாளை கிணறு இது போன்று எத்தனையோ உள்ளது எதுவாக இருந்தாலும் குழந்தைகளை பாதுகாப்பதற்கு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் சரி பாதுகாப்பு முறைகளை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

.Conclusion:National body governance for children அமைப்பதற்கு டெல்லி சென்று வேலை தொடங்கி விட்டோம், state body governance for children அமைப்பதற்கு தமிழக அரசிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.