ETV Bharat / sitara

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்?

author img

By

Published : Apr 25, 2021, 2:34 PM IST

நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில், இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Is gautham menon and vetri maaran join together
Is gautham menon and vetri maaran join together

இயக்குநர் வெற்றிமாறன் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார். விடுதலை என பெயரிடப்பட்ட இப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், விஜய்சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கிறார். இப்படத்திற்கு விடுதலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கல காடுகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.