ETV Bharat / sitara

என் தலைவர் வென்ற அதே மேடையில் எனக்கும் விருது - மகிழ்ச்சியில் தனுஷ்

author img

By

Published : Oct 25, 2021, 7:01 PM IST

என் தலைவர் விருது வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற மகிழ்ச்சியை விவரிக்க முடியாது என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

dhanush
dhanush

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் 2019ஆம் ஆண்டுக்கான 67ஆவது தேசிய விருதுகளை மார்ச் 22 ஆம் தேதி அறிவித்தது. அப்போது விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் கரோனா தொற்று அச்சம் காரணமாக விருது வழங்கு விழா தள்ளிவைக்கப்பட்டது.

திரைத் துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது.

இந்நிலையில், இன்று (அக்.25) டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில், தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தானு உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ரஜினிக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டது. அதேபோல் தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இந்நிலையில்,நடிகர் தனுஷ் ரஜினியுடன் இருக்கும் புகைபடத்தை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன், " 'தாதா சாகேப் பால்கே' விருதை என் தலைவர் வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது விவரிக்க முடியாதது. இந்த கெளரவத்தை எனக்கு வழங்கிய தேசிய விருது ஜூரிக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை, ஊடகங்களுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் விருது முதல் தாதா சாகேப் பால்கே விருது வரை ரஜினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.