ETV Bharat / sitara

தமிழ்நாடு அரசின் விருது முதல் தாதா சாகேப் பால்கே விருது வரை ரஜினி!

author img

By

Published : Oct 25, 2021, 6:13 PM IST

40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு அரசின் விருது முதல் தாதா சாகேப் விருது வரை பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

ரஜினி
ரஜினி

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினிகாந்த் எண்ணற்ற விருதுகளை வாங்கியுள்ளார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த ரஜினி இன்று இந்திய சினிமாவில் மிகப் பெரிய உயரத்தை எட்டியுள்ளார்.

80களின் காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை அவர் நடித்த படங்களின் மூலம் ஏற்படுத்தினார் ரஜினி . மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக இருந்தார், இருக்கிறார். நடிகராக மட்டும் அல்லாது குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 80 களின் இறுதியிலேயே கோடியைத் தொட்டு சம்பளம் வாங்கியவர் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு சொல்லவா வேண்டும். இவரின் நடிப்பு, படங்களுக்காக ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் விருது முதல் இந்திய அரசால் வழங்கப்படும் விருது வரை அனைத்தையும் பெற்றுள்ளார்.

ரஜினி பெற்ற விருதுகள்

1978 ஆம் ஆண்டு முதல்முறையாக முள்ளும் மலரும் படத்தின் காளி கதாபாத்திரத்திற்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார். 1982 ஆம் ஆண்டு மூன்று முகம், 1984 ஆம் ஆண்டில் நல்லவனுக்கு நல்லவன், 1994 ஆம் ஆண்டு முத்து, 1999 ஆம் ஆண்டு படையப்பா, 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி, 2007ஆம் ஆண்டு சிவாஜி ஆகிய படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார்.

நல்லவனுக்கு நல்லவன் படத்திற்காக பிலிம்பேர் விருதையும் பெற்றார். 1995 ஆம் ஆண்டு பாட்ஷா, முத்து படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு செவாலியே சிவாஜி கணேசன் விருது, 2017 ஆம் ஆண்டு கபாலி படத்தில் நடித்ததற்காக ஆனந்த விகடன் விருது பெற்றார்.

2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது, இந்தியாவின் 2 ஆவது பெரிய விருதான பத்ம விபூஷன் விருதை 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ரஜினிக்கு வழங்கி கவுரவித்தது. அதே ஆண்டில் ஆந்திர அரசால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான நந்தி விருதையும் பெற்றார்.

தாதா சாகேப் பால்கே விருது

இந்நிலையில் இன்று (அக்.25) டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், இந்தியத் திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.