ETV Bharat / sitara

ஷில்பா கணவர் கைது- கெஹனா வசிஷ்ட் கிலி!

author img

By

Published : Aug 3, 2021, 10:06 PM IST

ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டி கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், (ஏ)டாகூட நடிகைகள் முன்பிணைக்கு நீதிமன்றத்தில் வாசலில் காத்து கிடக்கின்றனர்.

Gehana Vashisht
Gehana Vashisht

மும்பை : தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் கைது ஆபாச பட நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆபாச பட வழக்கில் பிரபல நடிகை கெஹனா வசிஷ்டும் சிக்கியுள்ளார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்பிணை விண்ணப்பித்திருந்தார்.

எனினும் இவரது வழக்கு இன்னமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில் விசாரணை ஆக.6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆபாச படங்களில் நடித்தது குறித்து நடிகை கெஹனா வசிஷ்ட் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “ஆபாச படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பவில்லை, ஆனால் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை - நடிகை ஷில்பா ஷெட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.