ETV Bharat / sitara

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் கென்னடி கிளப் - பாரதிராஜா

author img

By

Published : Aug 24, 2019, 6:51 PM IST

படத்தை எடுக்கும் போது எனக்கு புரியவில்லை. ஆனால் எடிட் செய்து பார்த்த பின்னர் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இயக்குநர் சுசீந்திரன் பணியாற்றும் விதமே வித்தியாசமானது என்று தான் நடித்துள்ள 'கென்னடி கிளப்' படம் குறித்து விவரித்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

Director Bharathiraj talks about 'Kennedy club' movie

சென்னை: கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் 'கென்னடி கிளப்' திரைப்படம் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள 'கென்னடி கிளப்' படத்தில் இயக்குநர் பாரதிராஜா, சசிக்குமார், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர புதுமுக நடிகைகளும், நிஜ கபடி விளையாட்டு வீரர்களும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது,

'கென்னடி கிளப்' படத்தில் நான் நடித்திருப்பதால் படத்தைப் பற்றி நானே பேசுவது சரியா, தவறா? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். படத்தில் என்னை தவிர்த்து ஏராளமான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்கள் குறித்து நான் பேசவேண்டும். என்னைப் பற்றி நான் பேசவில்லை அதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

இந்தப் படத்தில் சீன் பை சீனாகத்தான் நான் நடித்தேன். அதை எடிட் செய்து பார்க்கும்போது பிரமித்தேன். எனக்கு தெரியும் சுசீந்திரன் ஒரு நல்ல இயக்குநர். அவருடன் 'பாண்டியநாடு' படத்தில் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்தை எடுக்கும்போது எனக்கு புரியவில்லை. எடிட் செய்து பார்த்த பின்னர் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுசீந்திரன் பணியாற்றும் விதமே வித்தியாசமாக இருந்தது. அவருக்கு கபடி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் குடும்பமே கபடி சார்ந்த ஒரு குடும்பம்தான். அவர் தந்தை கபடி பயிற்சியாளராக உள்ளார்.

விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் வெளிவந்துள்ளன, ஆனால் நம் தாய் மண்ணின் வாசத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வது கபடி மட்டும்தான். இதை படமாக்குவது என்பது கபடி விளையாட்டை முழுவதும் தெரிந்தவரால் மட்டுமே முடியும் .

இந்தப் படத்தில் மூன்று பெண்களைத் தவிர மற்ற அனைவரும் உண்மையான விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளனர். சுசீந்திரனின் தந்தை 50 ஆண்டுகளாக ஒரு கபடிக் குழுவை உருவாக்கி பாரம்பரியத்தை கட்டிக்காத்து வருகிறார். இந்தப் படத்தில் சுசீந்திரனின் தந்தை வேடத்தில்தான் நான் நடித்துள்ளேன்.ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 'கென்னடி கிளப்' என்றார்.

கென்னடி கிளப் படம் பற்றி இயக்குநர் பாரதிராஜா பேச்

சு
Intro:ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் கென்னடி கிளப் - பாரதிராஜாBody:கென்னடி கிளப் படத்தில் நான் நடித்து இருப்பதால் படத்தைப் பற்றி நானே பேசுவது சரியா தவறா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். படத்தில் என்னை தவிர்த்து நடிகர்கள் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்கள் குறித்து நான் பேசவேண்டும். என்னை பற்றி நான் பேசவில்லை அதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இந்தப்படத்தில் சீன் பை சீனாக தான் நான் நடித்தேன் அதை எடிட் செய்து பார்க்கும் பொழுது பிரமித்தேன். எனக்கு தெரியும் சுசீந்திரன் ஒரு நல்ல இயக்குனர் அவருடன் பாண்டியநாடு படத்தில் பணியாற்றி உள்ளேன். இந்த படத்தை எடுக்கும் போது எனக்கு புரியவில்லை எடிட் செய்து பார்க்கும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது சுசீந்திரன் பணியாற்றும் விதமே வித்தியாசமாக இருந்தது. அவருக்கு கபடி என்றால் மிகவும் பிடிக்கும் அவர் குடும்பமே கபடி சார்ந்த ஒரு குடும்பம்தான். அவர் தந்தை கபடி பயிற்சியாளராக உள்ளார். விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் வெளிவந்துள்ளன ஆனால் நாம் தாய் மண்ணின் வாசத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வது கபடி மட்டும்தான். இதை படமாக்குவது என்பது கபடி விளையாட்டை முழுவதும் தெரிந்தவரால் மட்டுமே முடியும் .இந்த படத்தில் மூன்று பெண்களைத் தவிர மற்ற அனைவரும் உண்மையான விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளனர். சுசீந்திரனின் தந்தை 50 ஆண்டுகளாக ஒரு கபடி குழுவை உருவாக்கி பாரம்பரியத்தை கட்டிக்காத்து வருகிறார். இந்த படத்தில் சுசீந்திரனின் தந்தை வேடத்தில் தான் நான் நடித்துள்ளேன்.
Conclusion:ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான் கென்னடி கிளப்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.