ETV Bharat / sitara

உங்கள் தெய்வீக குரல் மனதை வருடுகிறது... தனுஷ் யார செல்றாருனு தெரியுமா!

author img

By

Published : Feb 9, 2019, 11:49 AM IST

உங்கள் தெய்வீக குரலும், புனிதமான இசையும் மனதை வருடுகிறது என இசையமைப்பாளர் ஷான் ரோல்டனைப் பாராட்டி தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sean roldan

தமிழ் சினிமாவில் உள்ள பல திறமையானவர்களை தனது படங்களில் அறிமுகப்படுத்துவதில் தனுஷ் தவறுவதில்லை, அதோடு திறமையானவர்களை பாராட்டுவதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதும் இல்லை.

இந்நிலையில் ஷான் ரோல்டன் பாலாஜி மோகன் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவர் படத்திற்கு இசையமைப்பதோடு பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தனுஷின் 'பவர் பாண்டி', 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஷான் ரோல்டன் இசையில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பலரும் ரோல்டனுக்கு பாராட்டுகளை தெரிவித்துவந்தனர்.

தற்போது தனுஷ் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் பாடல்கள் அருமையாக இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட்டை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் உங்கள் குரலில் வெள்ளாட்டு கண்ணழகி ,கோடி அருவி கொட்டுதே பாடல்கள் அருமையாக உள்ளன என்றும், உங்கள் தெய்வீக குரலும், புனிதமான இசையும் மனதை வருடுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.


AP Video Delivery Log - 0200 GMT News
Saturday, 9 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0114: US CA Snowbound Must credit Joel Keeler 4195206
Crews reopen road to snowbound California lodge
AP-APTN-0039: Venezuela Border AP Clients Only 4195205
Venezuelan military continues to block aid
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.