ETV Bharat / sitara

இந்தியில் மிரட்டும் 'அர்ஜுன் ரெட்டி' : 'கபீர் சிங்' டீசர் வைரல்

author img

By

Published : Apr 9, 2019, 7:30 PM IST

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கும் கபீர் சிங் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியுள்ளது.

கபீர் சிங்

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்த இந்தப் படம் தமிழில் பாலா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படம் கபீர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் ஜூன் 21-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளார் சந்தீப் வங்கா. ரசிகர்களுக்கு கபீர் சிங்கை மிகவும் பிடித்துவிட்டது. கபீர் சிங் டீஸரை பார்த்தவர்கள் ஷாஹித் கபூரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகி வருகிறது. துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பனிதா சந்து அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் இரண்டாவது கதாநாயகியாக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சய்யா இயக்குகிறார்.

Intro:Body:

Kabir Singh is a Hindi film written and directed by Sandeep Reddy Vanga starring Shahid Kapoor and Kiara Advani in lead roles. The film is an adaptation of the Telugu cult hit Arjun Reddy that had Vijay Deverakonda and Shalini Pandey playing the film's protagonists.



The makers of Kabir Singh have launched the teaser of the film. The film's male lead, Shahid Kapoor, took to Twitter to reveal the film's teaser. I’m not a rebel without a cause. This is ME ! #kabirsingh https://t.co/IFjTuIJoWG— Shahid Kapoor (@shahidkapoor) April 8, 2019



On the technical front, Kabir Singh has cinematography by Santhanakrishnan. The film is co-produced by Bhushan Kumar, Murad Khetani, Krishan Kumar and Ashwin Varde under the banner T-Series films and Cine1 studios and the film is set to release on 21st June 2019. Stay tuned for more updates on the film





https://www.youtube.com/watch?time_continue=52&v=eq2ek0mdji4




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.