ETV Bharat / sitara

அஜித் ரசிகர்களால் மிரட்டப்படுகிறேன்: ’அங்காடி தெரு’ சிந்து ஆவேசம்

author img

By

Published : Oct 7, 2020, 9:20 PM IST

சென்னை: மருத்துவ உதவிக் கேட்ட என்னை அஜித் ரசிகர்கள் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர் என ’அங்காடி தெரு’ சிந்து தெரிவித்துள்ளார்.

angadi-theru-sindhu-press-meet
angadi-theru-sindhu-press-meet

2010ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் அங்காடிதெரு வெளியாகி பெரும் வெற்றிப்பெற்றது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை சிந்து தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மருத்துவ உதவிக்காக சிரமப்படும் இவர் பொருளாதார உதவி கேட்டு இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.

அதில், சினிமா துறையில் தான் சம்பாதித்த பணம் குடும்பத்திற்கு கூட செலவிடாமல் பொது சேவைக்கு பயன்படுத்தியுள்ளேன். தன்னுடன் நடித்த சின்னச் சின்ன நடிகர்கள் கூட தனக்கு மருத்துவ உதவி செய்தனர். ஆனால் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்கள் என்று கூறப்படும் ரஜினிகாந்த், அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் ஆகியோரை பலமுறை தொடர்பு கொண்டும் எந்தப் பயனுமில்லை. அவர்கள் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற பொய்யான பிம்பம் உள்ளது. அவர்கள் உண்மையில் உதவுவதில்லை.

நடிகர் அஜித் அனைவருக்கும் உதவி செய்கிறார் என்று கூறப்படுகிறது. அதிலும் உண்மையில்லை. சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு கோரிக்கை வைக்க அவரை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும், அவரது மேனேஜர் நடிகர் அஜித்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார்.

’அங்காடி தெரு’ சிந்து ஆவேசம்

இதை நான் பொதுவெளியில் கூறியதால், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் என்னை தொலைபேசி மூலம் தகாத வார்த்தைகளால் மிரட்டுகின்றனர். இதேபோன்று, நடிகர் விஜயின் தொலைபேசி எண் வெளிநாட்டில் உள்ள நண்பர் மூலம் வாங்கி பல முறை தொடர்பு கொண்டேன். பல குறுஞ்செய்திகள் அனுப்பினேன். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை. சரி இவர்கள் எல்லாம் நடிகர்கள்.

ராகவா லாரன்ஸ் ஒரு அமைப்பை உருவாக்கி அதில் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார். அவரிடம் கேட்போம் என்று முயன்று பார்த்தேன். அங்கும் ஏமாற்றம் தான். ஒருவரும் எனக்கு உதவி செய்ய முன் வரவில்லை. படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு உதவுவது போன்று செயல்படும் நடிகர் சிவகார்த்திகேயன் இது தொடர்பாக பேசுவதற்கு பலமுறை முயன்றும் எந்தத் தகவலும் இல்லை.

நாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர் சங்கம் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கமாகட்டும் பதவி ஆசையில் ஒருவரை ஒருவர் சாடி கொள்கிறார்களே தவிர மருத்துவ உதவி கேட்ட எனக்கு உதவ முன்வரவில்லை. இது போன்ற சங்கங்கள் இருந்தும் பயனில்லை.

பெரிய நட்சத்திரங்கள் என்று சொல்லக் கூடியவர்கள் கூட தனக்கு உதவி செய்யவில்லை. ஆனால் நடிகர் கார்த்தி, தம்பி ராமையா, கோவை சரளா, பிளாக் பாண்டி, சூரி உள்ளிட்டவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை தனக்கு செய்தனர். மேலும் தனக்கு மருத்துவ சிகிச்சை செய்வதற்காக உதவ வேண்டும் என்று தனது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக் பாஸ் வந்த வேடந்தாங்கல் நான்தானேடா.... ஷிவானி க்ளிக்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.