ETV Bharat / sitara

பிஎஸ்பிபி பள்ளியை மூடுங்கள்;சாதிப்பிரச்னையாக மாற்றாதீர்கள் - விஷால் ஆவேசம்

author img

By

Published : May 28, 2021, 6:41 PM IST

சென்னை: பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த கொடுமை வெட்கக்கேடனானது எனவும் மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Vishal
Vishal

சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ராஜகோபால் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை மிகவும் வருத்திற்குள்ளாகியது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் ஒருவரும் ஒரு முறைகூட மன்னிப்பு கோரவில்லை.

  • The Sexual Harrasement by a Teacher from #PSBB makes me cringe & realise that the School should be shut, not once anyone has apologised to the Students/Parents affected, such crimes should be taken really harshly,

    I request my friend @Anbil_Mahesh to take strong action pic.twitter.com/jF2MfehyuN

    — Vishal (@VishalKOfficial) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறமால் இருக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஒரு சாதிப்பிரச்சனையாக மாற்றுவது வெட்கக்கேடனானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என இனி வரும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும். இப்போதாவது மாணவர்கள், பெற்றோர்களிடம் பள்ளிநிர்வாகம் மன்னிப்பு கோருங்கள். இதை சாதிப்பிரச்சனையாக மாற்றாதீர்கள்" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.