ETV Bharat / sitara

'ஜீவி' ஹீரோவின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதானாம்!

author img

By

Published : Feb 25, 2020, 10:34 AM IST

'ஜீவி' திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் வெற்றியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டது.

actor Vetri new movie titled as Memories
actor Vetri new movie titled as Memories

'8 தோட்டாக்கள்', 'ஜீவி' போன்ற திரைப்படங்களின் மூலம் தனது இயல்பான நடிப்புக்காக விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் வெற்றி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'ஜீவி' படத்திற்குப்பின், தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டானார்.

தற்போது ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் 'C/o காதல்' என்னும் திரைப்படத்தில் வெற்றி நடித்துவருகிறார். தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்கான இத்திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியானது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையில் உருவாகிவரும் இத்திரைப்படம் மெமரீஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காந்தி தேசத்திற்கு வரவேற்கிறோம் - ட்ரம்பை வரவேற்ற ரஹ்மான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.