ETV Bharat / sitara

இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா படலடா - கதிரின் ‘ஜடா’ ட்ரெய்லர்!

author img

By

Published : Nov 15, 2019, 7:41 PM IST

கதிர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜடா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Jada trailer

அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கதிர், ரோஷினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஜடா’. பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரராக கதிர் நடித்துள்ளார். இதில் யோகிபாபு, ஆடுகளம் கிஷோர், லிஜீஸ், ஓவியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஆக்‌ஷன் திரில்லராக கால்பந்தாட்ட விளையாட்டின் இன்னொரு பக்கத்தை சுவாரஸ்யமான திரைக்கதையோடு கூறும் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

திரில்லர் கதை என்று கூறப்பட்டாலும், ட்ரெய்லரை பார்க்கும்போது ஹாரர் பட எஃபெக்ட் இருக்கிறது. சாம் சிஎஸ் இசை அதற்கு வலு சேர்த்திருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த கதிர் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

Intro:Body:

Jada trailer release


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.