ETV Bharat / sitara

'லால் சிங் சத்தா' பட அப்டேட்: மிலிட்டரி உடையில் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆமீர் கான்

author img

By

Published : Mar 1, 2020, 6:15 PM IST

'லால் சிங் சத்தா' படத்தில் நடிகர் ஆமீர் கானின் நியூ லுக் புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகிறது.

மிலிட்டரி உடையில் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அமீர் கான்
மிலிட்டரி உடையில் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அமீர் கான்

ஆமீர் கான், கரீனா கபூர் ஆகியோர் இணைந்து நடித்துவரும் படம் 'லால் சிங் சத்தா'. இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கிவரும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான 'Forrest Gump' படத்தின் இந்தி ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

இந்நிலையில், தற்போது 'லால் சிங் சத்தா' படத்தின் ஷூட்டிங் புகைப்படம் லீக்காகியுள்ளது. அதில் ஆமீர் கான், மிலிட்டரி உடையில், தாடி, மீசையில்லாமல், வெள்ளை நிற கண்ணாடி அணிந்துகொண்டு தனது ரசிகையுடன் புகைப்படம் எடுத்துள்ளார். சல்மான் கானின் இந்த நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

'தலாஷ்', '3 இடியட்ஸ்' படங்களுக்குப் பிறகு ஆமீர் கான் - கரீனா இணைந்து பணிபுரியும் மூன்றாவது படம், 'லால் சிங் சத்தா'.

இதையும் படிங்க: இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இரண்டு வாரத்துக்குள் சிவில் நீதிமன்றத்தில் முடிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.