ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த பிகார் முதலமைச்சர்!

author img

By

Published : Aug 4, 2020, 7:16 PM IST

மும்பை: கனமழை காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய புகாரின் மீதான விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், ஜூன் 14ஆம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரின் தற்கொலைக்குக் காரணம், திரைத்துறையில் இருக்கும் வாரிசு அரசியல், பின்புலம் இல்லாமல் சினிமா துறைக்குள் வருபவர்களை நடிக்க விடுவதில்லை என்று பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என ஒரு சாராரும், அவர் கொலை செய்யப்பட்டார் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என மற்றொரு சாராரும் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, சுஷாந்த்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்; அது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, எனப் பார்க்காமல் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுஷாந்த்தின் தற்கொலை தொடர்பாக பாட்னா, மும்பை என இரண்டு இடங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னாவில் உள்ள ராஜிவ் நகர் காவல் நிலையத்தில் நடிகையும், சுஷாந்த்தின் காதலியுமான ரியா உள்ளிட்ட ஆறு பேர் மீது புகார் கொடுத்தார். இதனை விசாரிக்க பாட்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினய் திவாரி தலைமையிலான குழுவினர் மும்பை சென்றனர்.

ஆனால், வெளிமாநிலத்திலிருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைப்பது, கட்டாயமாக்கப்பட்டதால் காவல் துறையினரை வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 4) பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் சுஷாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், மும்பையில் கனமழை பெய்து வருவதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.