ETV Bharat / sitara

குழந்தைகள் பாதுகாப்பு கருதி லாஸ் ஏஞ்சல்ஸிற்கு குடிபெயர்ந்த சன்னி

author img

By

Published : May 11, 2020, 9:13 PM IST

கரோனா தொற்று பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தன் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது தங்கியுள்ளதாக பிரபல பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

கணவர், குழந்தைகளுடன் சன்னி லியோன்
கணவர், குழந்தைகளுடன் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன், 2000ஆம் ஆண்டு முதலே மும்பையில் வசித்து வருகிறார். ஆனால் மும்பையில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது தன் குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார்.

முன்னதாக, உலகம் முழுவதும் நேற்று முன்தினம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தன் இரு மகன்கள், மகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் சன்னி பகிர்ந்திருந்தார்.

அதில், ”கண்களுக்குப் புலப்படாத கொடிய கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகாமல், என் குழந்தைகள் எங்கு பாதுகாப்பாக இருப்பார்களோ, அங்கு அவர்களை அழைத்து வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து தன் அன்னையர் தின வாழ்த்துகளையும் பகிர்ந்திருந்தார்.

தன்னுடைய தாய் இருந்திருந்தால் இதைத் தான் அவரும் விரும்பியிருப்பார் என்று கூறி, தன் அன்னையை நினைவுகூர்ந்து அவருக்கும் சன்னி அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ’லாக்ட் அப் வித் சன்னி‘ எனும் இணையதள நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி, தன் மும்பை வீட்டிலிருந்து குழந்தைகளுடன் மகிழ்ந்திருக்கும் புகைப்படங்கள், காணொலிகளை அவர் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : லோக்கல் சேனலுக்கு எச்சரிக்கை விடுத்த கே.ஜி.எஃப் தயாரிப்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.