ETV Bharat / sitara

கல்லூரி தகுதிப் பட்டியலில் முதலிடம் பிடித்த சன்னி!

author img

By

Published : Aug 28, 2020, 8:29 PM IST

கொல்கத்தா : இளங்கலை படிப்பிற்கான கல்லூரி தகுதிப் பட்டியலில், சன்னி லியோனின் பெயர் முதலிடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

சன்னி லியோன்
சன்னி லியோன்

கொல்கத்தாவில் உள்ள அசுதோஷ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் அந்தக் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தகுதிப் பட்டியலில் நடிகை சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அதனை வைரலாக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடுத்த செமஸ்டரில் உங்கள் அனைவரையும் நான் கல்லூரியில் சந்திக்கிறேன்" என குறும்புத்தனமாக பதிவிட்டிருந்தார். தற்போது இந்த ட்வீட்டை நெட்டிசன்கள் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

  • See you all in college next semester!!! Hope your in my class ;) 😆😜

    — sunnyleone (@SunnyLeone) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், ”சன்னி லியோனின் பெயரை யாரோ வேண்டுமென்றே டைப் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர். இந்தத் தவறை நாங்கள் சரி செய்து வருகிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
தகுதிப் பட்டியலில், விண்ணப்ப ஐடி, ரோல் எண், சன்னி லியோனின் பெயர் ஆகியவற்றைப் பதிவிட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நான்கு பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவராகவும், பொதுப்பிரிவு வகுப்பைச் சேர்ந்தவராகவும் அவரைப் பதிவிட்டுள்ளனர்.முன்னதாக இதேபோல், ரயில்வே துறையின் தொழில்நுட்பப் தேர்வில் சன்னி லியோனின் பெயர் முதல் இடத்தைப் பிடித்தவராக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.