ETV Bharat / sitara

மனைவியுடன் இணைந்து கிராவிட்டி சேலஞ் செய்த ஷாகித்

author img

By

Published : Mar 8, 2021, 12:50 PM IST

கணவன் - மனைவி இணைந்து செய்யும் கிராவிட்டி சேலஞ்சை பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஷாகித் கபூர் - மீரா ராஜ்புத் கபூர் ஜோடி வெற்றிகரமாக செய்துள்ளனர்.

Shahid Kapoor and Mira Kapoor
ஷாகித் கபூர் - மிரா கபூர்

டெல்லி: பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தனது மனைவியுடன் இணைந்து கிராவிட்டி சேலஞ் செய்துள்ளார். இதன் வீடியோவை அவரது மனைவி மீரா ராஜ்புத் கபூர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

உலக அளவில் ட்ரெண்டான ஐஸ் பக்கெட் சேலஞ் போன்று தற்போது கிராவிட்டி சேலஞ் பிரபலமாகி வருகிறது. கணவன் - மனைவி இணைந்து செய்யும் இந்தச் சேலஞ்சில், புவிஈர்ப்புக்கு எதிராக கைகளை பின்னாடி வைத்துக்கொண்டு சில விநாடிகள் இருவரும் தங்களது உடலை கீழே விழாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து இந்த சேலஞ்சை கணவர் ஷாகித் கபூருடன் இணைந்து செய்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவரது மனைவி மீரா ராஜ்புத் கபூர். அந்தப் பதிவில், 'எந்வொரு சவாலுக்கும் எப்போது தயாராக இருக்கிறார் மிஸ்டர் கபூர். மிகவும் மென்மையாக செயல்பட்டு சிறப்பாக செய்து முடித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சில மணி நேரங்களில் 4 லட்சம் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலானது. அத்துடன் தங்களது அன்பும், பாராட்டுகளும் பொங்கிய மெசேஜ்களையும் பிரபலங்களும், ரசிகர்களும் இதில் நிரப்பியுள்ளனர்.

அது என்ன கிராவிட்டி சேலஞ்

கணவன் - மனைவி இருவரும் தரையில் மண்டியிட்டு அமர்ந்து பின்னர் தங்களது முழங்கைகளையும் சேர்த்து தரையில் ஊன்ற வேண்டும். பின்னர் இருவரும் ஒரே சமயத்தில் தங்களது இரு கைகளையும் முதுகு பகுதியில் இணைத்து வைக்க வேண்டும். அவ்வாறு கைகளை வைக்கும் நேரத்தில் பிடிப்பு ஏதும் இல்லாமல் ஏற்படும் புவிஈர்ப்பு விசையை எதிர்த்து கீழே விழாமல் இருப்பவர்கள் இந்த கிராவிட்டி சேலஞ்சை சரியாக செய்து வென்றவர்கள் ஆகின்றனர்.

கிராவிட்டி சேலஞ்சில் சொதப்பும் கணவன்மார்கள்

இந்த சேலஞ்சில் மனைவிமார்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கணவர்கள் சொதப்பி, புவிஈர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாமல் கீழே விழுவது என்பது பெரும்பாலான ஜோடிகளுக்கு நிகழ்கிறது. இதை புவிஈர்ப்பு சக்தியால் கூட பெண்களை வெல்ல முடியவில்லை எனவும், ஆண்களை புவிர்ப்பு விசையும் கூடி விட்டுவைக்கவில்லை எனவும் வேடிக்கை கருத்து பரிமாற்றங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஷாகித் கபூர் - மீரா ராஜ்புத் கபூர் இந்த சேலஞ்சை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

ஷாகித் கபூர் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து விஜய் சேதுபதி, ராஷி கண்ணா ஆகியோருடன் இணைந்து வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: 'நீங்கள் மலிவானவர்தான்' - டாப்ஸியை சீண்டிய கங்கனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.