ETV Bharat / science-and-technology

கரோனாவை கண்டறிய 5 நிமிடம் போதுமா? அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் விந்தை கண்டிபிடிப்பு!

author img

By

Published : Jul 10, 2023, 5:36 PM IST

காற்றில் கலந்து உள்ள வைரஸ் தொற்றுகளை நிகழ்நேர அல்லது 5 நிமிடங்ளில் கண்டறியக் கூடிய வகையிலான காற்று கண்காணிப்பு கருவியை வாஷிங்டன் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

Air Monitor
Air Monitor

டெல்லி : கரோனா உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளை 5 நிமிடங்களில் கண்டறியக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நிகழ் நேர புதிய காற்று கண்காணிப்பு கருவியை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

வாஷிங்டனில் உள்ள செயின்ட் லுயிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், திட மற்றும் வாயு அளவிலான துகள்கள் மற்றும் அல்ட்ரா சென்சிடிவ் பயோசென்சிங் தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்ற நுட்பங்களை ஒன்றிணைத்து இந்த கருவியை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு அறையில் இந்த கருவியை வைக்கும் போது, 5 நிமிடங்களுக்குள் சுற்றுவட்டார காற்றில் கலந்து உள்ள கரோனா, அல்லது SARS-CoV-2 வைரசின் எந்த மாறுபாடுகளையும் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த கருவியை மருத்துவமனைகள், சுகாதார வசதிகள், பள்ளிகள், பொது இடங்களில் வைப்பதன் மூலம் சுற்றுவட்டார காற்றில் கலந்து உள்ள SARS-CoV-2 வகை தொற்றுகளை கண்டறிவது மட்டுமின்றி இன்ஃப்ளூயன்ஸா, மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் போன்ற பிற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்களை கண்காணிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதிநவீன உணர்திறன் கண்டறியும் கருவி இதில் பொருத்தப்பட்டு உள்ளதால் துல்லியமாக முடிவுகளை பெற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக அல்சைமர் நோய்க்கான அமிலாய்டு பீட்டாவை கண்டறியும் பயோ சென்சாராக இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பின்னர் நவீன தொழில் நுட்பத்துடன் SARS-CoV-2 வகை வைரஸ்களை கண்டறியும் கருவியாக மாற்றியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு அறை எவ்வளவு பாதுகாப்பானது என்பதை குறுகிய நேரத்தில் கண்டுபிடிக்க எதுவும் இல்லை என்று கூறிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பேராசிரியர் ஜான் சிரிட்டோ, 100 பேர் இருக்கும் ஒரு அறையில், இந்த கருவியை வைக்கும் போது நிகழ் நேரத்தில் அல்லது 5 நிமிடங்களில் வைரஸ் உள்ளதை கண்டறிய முடியும் என்றும், நோய்த் தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிய 5 அல்லது பத்து நாட்கள் காத்திருக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

கருவியில் பொருத்தப்பட்டு உள்ள சிறிய வடிவிலான நானோ நுட்பம் விரைவில் தொற்றை கண்டறிய உதவுவதாகவும், மறு உருவாக்கம் அல்லது செயலாக்க நடவடிக்கைகள் இதற்கு தேவையில்லை என்பதால் சீரிய முறையில் இயங்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். காற்று மிக அதிக வேகத்தில் கருவிக்குள் நுழைந்து மேற்பரப்பு சுழலை உருவாக்கும் போது, கருவியில் உள்ள திரவம் அதனுடன் கலந்து தொற்றை கண்டறிய உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஈரமான காற்றை உருஞ்சுவதற்கு தேவையான தானியங்கி கருவி, எலக்ட்ரோ கெமிக்கல் திரவுத்துடன் கலந்து தொற்றை வரிசைப்படுத்தும் என்றும் உள்புற காற்றில் உள்ள வைரசின் அளவு குறையும் போது, பிசிஆர் சோதனை கருவி மூலம் வைரசை கண்டறிய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கரோனா பாதித்த இரண்டு நோயாளிகளின் குடியிருப்புகளில் இந்த கருவியை கொண்டு பரிசோதனை நடத்தியதாகவும், படுக்கையறையில் உள்ள காற்றில் கலந்து இருந்த நிகழ்நேர பிசிஆர் பரிசோதனை முடிவுகளையும் வைரஸ் இல்லாத கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்க்கையில், காற்றில் கலந்து உள்ள ஆர்.என்.ஏ. வைரஸ் மாதிரிகளை கருவி கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம், கட்டுபடுத்தப்பட்ட அறையில் இருந்த காற்று மாதிரிகளில் வைரஸ் தொற்றை கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : Sidhi Urination Case: வீடியோவில் இருக்கும் நபர் நான் இல்லை... திடீர் ட்விஸ்ட்... முதலமைச்சர் யார் கால்களை கழுவினார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.