ETV Bharat / science-and-technology

ஸ்டைலிஷ் லுக்... பஜாஜ் ஆட்டோ பல்சர் என்எஸ், ஆர்எஸ் அறிமுகம்!

author img

By

Published : Oct 16, 2020, 11:45 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

பஜாஜ் ஆட்டோ அதன் பல்சர் என்எஸ், பல்சர் ஆர்எஸ் தொடர் இருசக்கர வாகனங்களின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை திருவிழா காலத்திற்கு முன்னதாக புதிய தோற்றம், புதிய வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தியது.

Bajaj Auto launches new versions of Pulsar Ns and RS model motor cycles
Bajaj Auto launches new versions of Pulsar Ns and RS model motor cycles

மும்பை: பஜாஜ் ஆட்டோ தனது பல்சர் என்எஸ், பல்சர் ஆர்எஸ் தொகுப்பு இருசக்கர வாகனங்களின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை திருவிழா காலத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இரு சேனல் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கொண்ட பல்சர் ஆர்எஸ் 200 விலை ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 179, என்எஸ் 200இன் விலை ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 219 என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Bajaj Auto launches new versions of Pulsar Ns and RS model motor cycles
பஜாஜ் பல்சர் என் எஸ் 200

பல்சர் என்எஸ் 160இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் விலை 1 லட்சத்து 08 ஆயிரத்து 589 ரூபாய் எனவும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. புதிய ஆர்எஸ், என்எஸ் தொடர் இருசக்கர வாகனங்கள் அக்டோபர் 23 முதல் பயனர்களுக்காக விற்பனைக்கு வரவுள்ளது.

பல்சர் ஆர்எஸ் 200 பிரிவு, முன்னணி தொழில்நுட்பம், எரிபொருள் உட்செலுத்துதல், திரவ குளிரூட்டலுடன் 4-வால்வு டிரிபிள் ஸ்பார்க் டிடிஎஸ்-ஐ இன்ஜின் ஆகியவற்றுடன், இரட்டை சேனலுடன் 300 மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக்குகள் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Bajaj Auto launches new versions of Pulsar Ns and RS model motor cycles
பஜாஜ் பல்சர் ஆர் எஸ் 200

பல்சர் என்எஸ் 200 ஒரு திரவ-குளிரூட்டப்பட்ட, நான்கு வால்வு, டிரிபிள்-ஸ்பார்க் டிடிஎஸ்-ஐ எஞ்சினுடன், எரிபொருள் உட்செலுத்தல் திறனுடன் வருகிறது.

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.