ETV Bharat / lifestyle

மிளிர்ந்தெழும் இந்திய கைபேசி நிறுவனம்: அதிரடி விலையில் லாவா Z66 களமாட வருகிறது

author img

By

Published : Aug 6, 2020, 6:33 PM IST

இந்திய கைபேசி நிறுவனமான லாவா தனது புதிய இசட் ரக திறன்பேசியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 3950mAh மின்கல திறன், இரட்டை பின்பக்க படக்கருவி என பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த தகவல் சாதனத்தின் விலை வெறும் 7,777 ரூபாய் மட்டும் தான்.

LAVA Z66
LAVA Z66

ஃபின்லாந்தின் நோக்கியா, கொரியன் சாம்சங் காலம் அது. இந்த சந்தைகளை பிடிக்க இந்திய நிறுவனங்கள் முனைப்பு காட்டியபோது மைக்ரோமாக்ஸ் அதற்கான தளம் அமைத்து, கட்டுகடங்காமல் தனது தகவல் சாதனங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. காலத்திற்கு ஏற்றவாறும் புதிய தொழில்நுட்பங்களுடன் தனது படைப்புகளை வெளியிட்டது மைக்ரோமாக்ஸ்.

அதனைத் தொடர்ந்து வந்தது தான் லாவா, கார்பன் ஆகிய இந்திய தகவல் சாதன தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் சீன கைபேசி நிறுவனங்கள் உள்ளே வர, உள்நாட்டு தயாரிப்பு மழுங்கிப்போனது. இதற்கான காரணம், சீனாவிலிருந்து அனைத்து உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்து இங்கே ஒன்றுசேர்த்து விற்றுவந்தது. உள்நாட்டிலேயே இதற்கான கட்டமைப்பை உருவாக்கியிருந்தால், இந்திய நிறுவனங்களுக்கு இந்த நிலை எப்போதும் ஏற்பட்டிருக்காது.

டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!

தற்போதைய சூழலில் சீன நிறுவனங்களுக்கு, சீன பொருள்கள் இறக்குமதிக்கும் இந்தியா கிடுக்குப்பிடி பிடிப்பதால், இந்திய நிறுவனங்கள் மீட்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவ்வேளையில் தனது புதிய திறன்பேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது லாவா மொபைல்ஸ். இதனை மின்னணு வணிக தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிதாக வெளியிட்டிருக்கும் லாவா Z66 குறித்த தகவல்களை காணலாம்.

சீன செயலிகளுக்குத் தடை; உங்களுக்கு உதவும் 'மேட் இன் இந்தியா' செயலிகள்

லாவா Z66 சிறப்பம்சங்கள்:

  • 6.08’’ இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் நாட்ச் கொண்டு 2.5டி கர்வுட் தொடுதிரை
  • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயல்திறன்
  • ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ் (ஆண்ட்ராய்டு 10)
  • 3 ஜிபி செயலாக்க சேமிப்பு திறன் (ரேம்)
  • 32 ஜிபி கோப்பு சேமிப்பு திறன்
  • எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரை சேமிக்கும் வசதி
  • 13 எம்பி செல்பி புகைப்படகருவி
  • 13எம்பி + 5எம்பி இரட்டை பின்பக்க படக்கருவி, எல்இடி ப்ளாஷ் லைட் உடன்
  • இரட்டை சிம் பொருத்தும் வசதி
  • புளூடூத் வி 4.2
  • ஓடிஜி மைக்ரோ-யூ.எஸ்.பி
  • கைரேகை ஸ்கேனர்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • 3950 எம்ஏஎச் மின்கல சேமிப்புத் திறன்
  • விலை ரூ.7,777
    LAVA Z66
    specifications of LAVA Z66
    LAVA Z66
    specifications of LAVA Z66
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.