ETV Bharat / lifestyle

கூகுள் பே: நாங்கள் வெறும் பணம் பரிமாறும் தளம் தான் - உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

author img

By

Published : Jul 23, 2020, 6:36 AM IST

கூகுள் பே பயன்பாட்டிற்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவையில்லை என்றும் கூகுள் பே பண பரிமாற்றத்தை நிர்வகிக்கவில்லை என்றும் மூன்றாம் தர பண பரிமாற்ற தளமாகத்தான் செயல்படுவதாகவும் கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Google Pay app does not require RBI authorisation
Google Pay app does not require RBI authorisation

டெல்லி: கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவையில்லை என்று கூகுள் இந்தியா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

கூகுள் பே பண பரிமாற்றத்தை நிர்வகிக்கவில்லை என்றும் மூன்றாம் தர பண பரிமாற்ற தளமாகத் தான் கூகுள் பே செயல்படுகிறது என்றும் நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.

'இரண்டரை லட்சம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை... ' : கூகுள் பே-வின் ஜூன் மாத சாதனை!

முன்னதாக, ‘‘கூகுள் பே என்பது ஒரு செயலியை அளிக்கும் மூன்றாம் தரப்பு சேவை நிறுவனம் மட்டும்தான்’’ என்று ரிசர்வ் வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. பணப் பரிவர்த்தனைக்கென தனி அமைப்பு எதையும் உருவாக்கி செயல்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தது.

எனினும் பணப் பரிவர்த்தனை சட்டம் 2007-ன் படி அது செயல்படுவதாகவும், எத்தகைய விதி மீறலும் இல்லை எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. உரிய அங்கீகாரம் பெறாமல், ‘கூகுள் பே’ செயல்படுவதாக பொதுநல வழக்கு ஒன்றை நிதி பொருளாதார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம் சீன நிறுவனமா? நிறுவனர் விளக்கம்

தனது ஜூன் மாத அறிக்கையில், கூகுள் பே பண பரிவர்த்தனையில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளதாக கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.