ETV Bharat / jagte-raho

14 வயது சிறுமி கர்ப்பம்; வளர்ப்பு தந்தை கைது!

author img

By

Published : Sep 23, 2020, 3:00 PM IST

துப்புரவு தொழிலாளியாக உள்ளார் தேவராஜ். தான் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பெண்ணின் மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியுள்ளார். இது தொடர்பாக தாய் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தேவராஜ்கை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

step father arrested in tirunelveli for raping child
step father arrested in tirunelveli for raping child

திருநெல்வேலி: 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் உலகம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். கணவர் இறந்த நிலையில் பேச்சியம்மாள் தனது 14 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருவதால், தேவராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இருவருமே துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் வேளையில், தேவராஜ் மட்டும் தினமும் மாலை பேச்சியம்மாளுக்கு முன்பாகவே வீட்டுக்கு வந்துவிடுவார். அப்போது வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியுடன் தேவராஜ் தவறான உறவு கொண்டுள்ளார். இந்த சூழலில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவே, பேச்சியம்மாள் அவரை மருத்துவரிடம் கொண்டு சோதனை செய்துள்ளார்.

தாய், மகள் தற்கொலை! ஒருவருக்கு தீவிர சிகிச்சை!

சோதனையின்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், சிறுமியிடம் இதுகுறித்து கேட்டபோது, தேவராஜ் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து பேச்சியம்மாள் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து, காவல் ஆய்வாளர் ரசீதா வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தார். வளர்ப்பு தந்தையே குழந்தையை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.