ETV Bharat / jagte-raho

நான்கு ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி - சோதனையில் சிக்கினார்!

author img

By

Published : Jun 17, 2020, 12:46 PM IST

சென்னை: லண்டனிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி ஒருவர் வந்தது சோதனையில் தெரியவந்தது, அதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

airport
airport

கரோனா அச்சுறுத்தலால் ஐரோப்பிய நாடுகளில் சிக்கித்தவித்த 152 இந்தியா்கள் நேற்றிரவு ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தி்ல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனா். பின்னர் அவர்களின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, சென்னையை சோ்ந்த 35 வயது ஆண் பயணி ஒருவரின் கடவுச்சீட்டை கணிணியில் ஆய்வு செய்த போது, அவா் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதும், அவா் மீது மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த அவரை, மாம்பலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்து கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (LOC) கொடுத்திருந்தனா். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அப்பயணியிடம் விசாரணை நடத்தி, மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.

அங்கு விரைந்த மகளிர் காவலர்களிடம் சோதனையில் சிக்கிய நபரை அதிகாரிகள் ஒப்படைத்தனா். கரோனா பீதி காரணமாக தனி பேருந்தில் ஏற்றப்பட்ட அவர், இரு பெண் காவலர்கள் பாதுகாப்புடன், தனிமைப்படுத்த தியாகராய நகரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி ஒருவா் வந்து சோதனையில் சிக்கியது விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.