ETV Bharat / jagte-raho

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி!

author img

By

Published : Dec 10, 2019, 1:02 PM IST

சென்னை: ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கத்திடம் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ. 8 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

cheating
cheating

நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ரூபாய் 8 லட்சத்திற்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கம் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார்.

அப்போது, வெங்காயம் அனுப்பியவரின் வங்கிக் கணக்கு எண்ணை மறைத்த லாரி ஓட்டுநர் பிரகாஷ், தன்னுடைய வங்கி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, நாசிக் வெங்காய வியாபாரியுடைய வங்கிக் கணக்கு எண் என நினைத்து, ரூ.8 லட்சத்தை ஓட்டுநர் பிரகாஷின் கணக்கில் சுந்தரலிங்கம் செலுத்தியுள்ளார்.

இதனிடையே தற்போது தான் மோசடி செய்யப்பட்டது குறித்து சுந்தரலிங்கத்திற்கு தெரியவரவே, இதுதொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன் பேரில், லாரி ஓட்டுநர் பிரகாஷை காவல துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மளிகைக் கடைப் பூட்டை உடைத்து அரை மூட்டை வெங்காயம், பணம் கொள்ளை!

Intro:Body:*வெங்காயம் இறக்குமதியில் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ.8 லட்சம் மோசடி*

சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கத்திடம் ரூ.8 லட்சம் பணம் மோசடி செய்துள்ளனர். நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ரூ.8 லட்சத்துக்கு சுந்தரலிங்கம் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார்.

வெங்காயம் அனுப்பியவரின் வங்கி கணக்கு எண்ணை மறைத்த லாரி ஓட்டுனர் தன்னுடைய வங்கி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார். நாசிக் வெங்காய வியாபாரியுடைய வங்கி கணக்கு எண் நினைத்து ரூ.8 லட்சத்தை ஓட்டுனர் பிரகாஷின் கணக்கில் செலுத்தியுள்ளார்..இது தொடர்பாக சுந்தரலிங்கம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.