ETV Bharat / jagte-raho

பைக் மீது ஆட்டோ மோதி விபத்து: காவலர் உடல் நசுங்கி பலி !

author img

By

Published : Dec 8, 2020, 5:12 PM IST

ஆவடியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

bike_accident
bike_accident

திருவள்ளூர்: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவந்தவர் சுதன்(41). இவர், மவுண்ட் பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.

இன்று (டிச.8) சுதன் பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோவர்த்தனகிரி பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, சாலையில் முன்னால் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் திடீரென்று பிரேக் போட்டுள்ளார்.

இதனையடுத்து, சுதனும் பிரேக் போட்டு தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், சுதனின் பின்னால் வேகமாக வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில், பஸ்ஸூக்கும் ஆட்டோவுக்கு இடையில் சிக்கிய சுதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் காவவர் சுதனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மதன்கனி(20) என்பவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: புழல் சிறையில் போக்சோ கைதி மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.