ETV Bharat / jagte-raho

1.5டன் செம்மரக்கட்டை பறிமுதல் : இருவர் கைது

author img

By

Published : Oct 31, 2020, 12:37 AM IST

திருவள்ளூர் : ஆரம்பாக்கத்தில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 1.5 டன் செம்மரக்கட்டைகள் சிக்கின.

இருவர் கைது
இருவர் கைது

தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி பப்பாளிப் பழம் ஏற்றிவந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில், 20 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து செம்மரக்கட்டைகளை அவ்வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவற்றைக் கடத்தி வந்த சித்தூரை சேர்ந்த ரவி, காளஹஸ்தியைச் சேர்ந்த வெங்கய்யா ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1.5டன் செம்மரக்கட்டை பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் 1.5 டன் எடை கொண்டதாகும். இவற்றின் மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்: மீட்டுத்தரக் கோரி மீனவர்கள் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.