ETV Bharat / international

பிபிசி - ட்விட்டர் மோதல்! "அரசு நிதிஉதவி பெறும் நிறுவனம்" பிபிசி ட்விட்டர் கணக்கு மாற்றம்!

author img

By

Published : Apr 10, 2023, 12:50 PM IST

பிபிசி நிறுவனத்தை அரசு நிதி உதவி பெரும் ஊடகம் என ட்விட்டர் சுயவிவர முகப்பில் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் : ட்விட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முதல் பல்வேறு சிக்கல்களையும் உலக பணக்காரர் எலான் மஸ்க் இலவசமாக பெற்று வருகிறார். அந்த வகையில் இந்த முறை, உலகின் பிரபல ஊடக நிறுவனமான பிபிசியை எலான் மஸ்க் வம்புக்கு இழுத்து உள்ளது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசியின் ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் பிபிசி நிறுவனம் அரசு நிதி உதவி பெறும் நிறுவனம் என குறிப்பிட்டு உள்ளார். பிபிசி ட்விட்டர் பக்கத்தை ஏறத்தாழ 22 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இந்த திடீர் முகப்பு மாற்றத்திற்கு பிபிசி நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ட்விட்டர் கணக்குகளுக்கு சிறப்பு முகப்புகள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பயிற்சியின் போது இப்படி நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதற்கு பிபிசி செய்தி நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பிபிசி சுதந்திரத்தன்மையுடன் இயங்கக் கூடிய செய்தி நிறுவனம் என்றும், அரசுடன் அதை தொடர்புபடுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

21 ஆம் நூற்றாண்டு முதல் மிக பிரபலமாக இயங்கி வரும் இந்த நிறுவனம், உரிமக் கட்டணத்திம் மூலம் பொது மக்களிடம் இருந்து நிதி உதவி பெற்று இயங்கியதாகவும் பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் அரசிடம் இருந்து நிதி உதவி பெறும் அல்லது அரசாங்க நிறுவனங்களாகப் பணிபுரியும் ட்விட்டர் கணக்குகளுக்காக அந்த முகப்பு பொருந்தும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் ட்விட்டர் நிறுவன அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி இந்த பிரச்சினை குறித்து முடிவு எடுக்கப்படும் என பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் என்பிஆர் உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்களின் கணக்குகளுக்கும் ட்விட்டர் நிறுவனம் இதேபோன்று முகப்புகளை மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. முகப்புகளை நீக்கா விட்டால் ட்வீட் மற்றும் கருத்துகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக என்பிஆர் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் இது பேசுபொருளாக மாறி உள்ளது. ஊடக நிறுவனங்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், ட்விட்டர் அதில் தலையிடுவதாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதேபோல் ரஷ்யா மற்றும் சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனங்களும் இந்த பிரச்சினையில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : World Homeopathy Day : "ஒரு ஆரோக்கியம் ஒரே குடும்பம்" - உலக ஹோமியோபதி தினம் கடைபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.