ETV Bharat / international

தைவான் பிரச்னைக்கு மத்தியில் சீனா, தென்கொரியா உயர்மட்ட ஆலோசனை!

author img

By

Published : Aug 10, 2022, 5:07 PM IST

சீனா-தைவான் இடையே பதற்றம் நீடித்துவரும் நிலையில், சீனா மற்றும் தென்கொரியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

Top
Top

பெய்ஜிங்: தனி நாடாக உருவான தைவானை சீனா தங்களுடையது என சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்துவருகிறது.

இதனால், தைவானை ஆதரிக்கும் நாடுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் நீடித்து வருகிறது. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச்சென்றதால், ஆத்திரமடைந்த சீனா தைவான் எல்லைப்பகுதிகளில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சீனா - தைவான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சீனா மற்றும் தென்கொரியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள், இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீனா வந்த தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் பார்க் ஜின், நேற்று(ஆகஸ்ட் 9) கிங்டாவ் நகரில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்டப்பல்வேறு துறைகளில் இருநாடுகளுடனான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத்தெரிகிறது. தொழில் துறை விநியோகங்களைப் பராமரிக்க வேண்டும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என இருநாட்டுத்தலைவர்களும் பரஸ்பரம் உறுதியளித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமெரிக்க முன்னாள் அதிபர் வீட்டில் FBI ரெய்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.