ETV Bharat / international

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

author img

By

Published : Jul 13, 2022, 2:26 PM IST

இலங்கையில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச
இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசாமான நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கும், உணவு பொருள்களுக்கும் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் தானாக கிளர்ச்சியெழுந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அதன் பின்னர் பதவியேற்ற ரனில் விக்ரமசிங்கின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தற்போது இலங்கை அதிபர் கோத்தபய அந்நாட்டு மக்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடியுள்ளார்.

இலங்கையில் நிலவிய பதட்டமான சூழ்நிலையால் இன்று அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோடிய அதிபர் மாலத்தீவுகளுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மேற்கு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்கின் வீட்டிற்கு பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் அவரை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினர்.

இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. வரும் ஜூலை 20 அன்று புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடு அடைந்துள்ள மோசமான நிலையை மீட்க உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகினால், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் 30 நாட்களுக்குள் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார், அவர் தற்போதைய பதவிக் காலத்தின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். அரசாங்கத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின் தலைநகரில் உள்ள மூன்று முக்கிய கட்டிடங்களான அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரிமாளிகையை ஆக்கிரமித்துள்ளனர்.

பிரதமரை பதவி விலகக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான இலங்கை, முன் இல்லாத பொருளாதாரக் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர்.

இதையும் படிங்க:இலங்கை நெருக்கடி: நாட்டைவிட்டு வெளியேறினார் அதிபர் கோத்தபய ராஜபக்சே - தப்பிச்சென்றது எங்கே?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.