ETV Bharat / international

ஈரானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு; 73 பேர் உயிரிழப்பு!

author img

By PTI

Published : Jan 3, 2024, 7:28 PM IST

Iran Explosions: ஈரானில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன.

Etv Bharat
Etv Bharat

தெஹ்ரான்: கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்காவால் ஈராக்கில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ரெவல்யூஸ்னரி கார்டின் எலைட் குவாடஸ் படையின் தலைமை ஜெனரல் குவாசம் சோலெய்மனியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம், ஈரானின் மத்திய நகரமான கெர்மனில் இன்று (ஜன.3) நடைபெற்றுக் கொண்டிருந்து உள்ளது. இந்த இடமானது, ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தென்கிழக்காக 820 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் இங்கு நிகழ்ந்துள்ளது. இதில், இதுவரை 73 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 170 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் ஈரானின் அவசரகால சேவையின் செய்தித் தொடர்பாளர் பாபக் ஏக்டாபராஸ்ட் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து உள்ளன. மேலும், இந்த நினைவு தின அனுசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சேலம் இரும்பாலை தனியார்மயமாக்கலை கைவிட்ட மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.