ETV Bharat / international

ஜப்பான் பிரமதமருடன் மோடி சந்திப்பு

author img

By

Published : Sep 27, 2022, 9:09 AM IST

Updated : Sep 27, 2022, 9:52 AM IST

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சிக்காக டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசினார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் பிரமதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜப்பான் முன்னாள் பிரதமர் நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் பிரமதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8 ஆம் தேதி நரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் சார்பில் ஜூலை 12 ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்நிலையில் முழு அரசு மரியாதையுடன் நினைவு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்றடைந்தார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த இறுதி நிகழ்வில் சுமார் 100 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சிக்காக டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சிக்காக டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி

முன்னதாக இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, “ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் அபேயின் மனைவி ஆகியோரை மோடி சந்திக்க உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, காலநிலை, உள்கட்டமைப்பு, தொழில்துறை மேம்பாடு மற்றும் மனித வளம் ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு!

Last Updated : Sep 27, 2022, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.