ETV Bharat / international

குழந்தைகளை கையாள ஸ்மார்ட் போன்கள்? - ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்...!

author img

By

Published : Sep 10, 2022, 3:51 PM IST

Updated : Sep 10, 2022, 7:55 PM IST

தென் கொரியாவில் குழந்தைகளை கையாளுவதில் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன்களையே அதிகம் நம்பி உள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தென் கொரியாவில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் அன்றாடப் பணிகளைச் செய்யும்போதும், சிறு குழந்தைகளைப் பராமரிக்கும் போதும் ஸ்மார்ட் போன்கள், டேப்லெட் மற்றும் கணினிகளையே பெரிதும் நம்பியிருப்பது கருத்துக் கணிப்பு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது நாட்டின் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன் அடிமைப் பிரச்சினையை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.

ஒன்று முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட ஆயிரத்து 500 பெற்றோர்களிடம் “கொரியா இன்ஸ்டிடியூட் ஆப் சைல்டு கேர் அண்ட் எஜுகேஷன்” கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் 70.2 விழுக்காடு பேர், அன்றாட வேலைகளை கையாள வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பதிலளித்தவர்களில், 74.3 விழுக்காடு பேர் தங்கள் குழந்தைகளை பொது இடங்களில் அமைதியாக இருக்க ஸ்மார்ட் போன்களைக் காண்பித்ததாகக் கூறியுள்ளனர். 52 விழுக்காடு பேர் கல்வி நோக்கங்களுக்காகவும் மேற்கோள் காட்டியுள்ளனர்.

கருத்துக் கணிப்பின்படி, 12 முதல் 18 மாத வயதில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் விகிதம் 20.5 விழுக்காடாகவும், அதைத் தொடர்ந்து 18 முதல் 24 மாத வயதுடையவர்கள் 13.4 விழுக்காடாகவும் உள்ளது. குழந்தைகளின் சராசரி பயன்பாட்டு நேரம், ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் மற்றும் கணினிகளில் வாரத்தில் 55.3 நிமிடங்களாகவும், வார இறுதி நாள்களின் சராசரி 97.6 நிமிடங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு முடிவுகள் நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன் அடிமையாதல் பிரச்சினையை பிரதிபலிக்கிறது. 2020ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் ஐசிடி அமைச்சகத்தின் ஆய்வின்படி, 35.8 விழுக்காடு பதின்ம வயதினரும், 3 முதல் 9 வயதுடைய குழந்தைகளில் 27.3 விழுக்காடு ஸ்மார்ட் போன் சார்ந்து, அதிக ஆபத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர்

Last Updated : Sep 10, 2022, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.