ETV Bharat / international

"கிராமி விருதுகள் 2023" - விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்!

author img

By

Published : Feb 6, 2023, 3:12 PM IST

2023ஆம் ஆண்டின், இசைக்கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த ஆல்பம், சிறந்த பாப், சிறந்த ராக் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

Grammy
Grammy

லாஸ் ஏஞ்சல்ஸ்: இசைத்துறையில் சாதனை படைத்தவர்கள் மற்றும் சிறந்து விளங்குபவர்களை கெளரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான 65ஆவது "கிராமி விருதுகள்" வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று(பிப்.5) நடைபெற்றது. இந்த ஆண்டு கிராமி விருதுகளை வென்றவர்களின் பட்டியலைக் காண்போம்...

  • சிறந்த ஆல்பம்: 'ஹாரிஸ் ஹவுஸ்' - பாடகர் ஹாரி ஸ்டய்லெஸ்
  • சிறந்த ரெக்கார்டு: 'அபவுட் டாம் டைம்' - பாடகி லிஸோ
  • சிறந்த பாடல் (பாடலாசிரியருக்கான விருது): 'ஜஸ்ட் லைக் தட்' - போனி ரைட்
  • சிறந்த புதிய பாடகர்: பாடகி சமரா ஜாய்
  • சிறந்த பாப் சோலோ: 'ஈசி ஆன் மீ' - அடீல்
  • சிறந்த பாப் இரட்டையர்/குழு: 'அன்ஹோலி' - சாம் ஸ்மித் மற்றும் கிம் பெட்ராஸ்
  • சிறந்த ராப் ஆல்பம்: 'மிஸ்டர். மாரலே மற்றும் தி பிக் ஸ்டெப்பர்ஸ்' - கென்ட்ரிக் லமர்
  • சிறந்த நடனம்/எலக்ட்ரானிக் ஆல்பம்: 'ரினைசன்ஸ்' - பியான்சே
  • சிறந்த ரிதம் அண்ட் புளூஸ் பாடல்: 'கஃப் இட்' - பியான்சே
  • சிறந்த கன்ட்ரி ஆல்பம்: 'பியூட்டிபுள் டைம்' - வில்லி நெல்சன்
  • சிறந்த பாப் வோக்கல் ஆல்பம்: 'ஹாரிஸ் ஹவுஸ்' - பாடகர் ஹாரி ஸ்டய்லெஸ்
  • சிறந்த மியூசிக்கா அர்பனா ஆல்பம்: 'அன் வெரானோ சின் டி' - பேட் பனி
  • சிறந்த ராக் ஆல்பம்: 'பேஷன்ட் நம்பர் 9' - ஓஸி ஆஸ்போர்ன்
  • சிறந்த ராக் பர்ஃபாமன்ஸ்: 'புரோக்கன் ஹார்ஸ்' - பிராண்டி கார்லில்
  • சிறந்த ராக் பாடல்: 'புரோக்கன் ஹார்ஸ்' - பிராண்டி கார்லில்
  • சிறந்த ராப் பர்ஃபாமன்ஸ்: 'தி ஹார்ட் பார்ட் 5' - கென்ட்ரிக் லமர்
  • சிறந்த ராப் பாடல்: 'தி ஹார்ட் பார்ட் 5' - கென்ட்ரிக் லமர்
  • சிறந்த மெலோடிக் ராப் பர்ஃபாமன்ஸ்: 'வெயிட் ஃபார் யு' - ஃபியூச்சர் ஃபீச்சரிங் டிராக்கே அண்ட் டெம்ஸ்
  • சிறந்த ரிதம் அண்ட் புளூஸ் ஆல்பம்: 'பிளாக் ரேடியோ 3' - ராபர்ட் கிளாஸ்பர்
  • சிறந்த ரிதம் அண்ட் புளூஸ் பர்ஃபாமன்ஸ்: 'ஹர்ஸ் அண்ட் ஹர்ஸ்' - முனி லோங்
  • சிறந்த பாரம்பரிய ரிதம் அண்ட் புளூஸ் பர்ஃபாமன்ஸ்: 'பிளாஸ்டிக் ஆஃப் தி சோஃபா' - பியான்சே
  • சிறந்த முற்போக்கு ரிதம் அண்ட் புளூஸ் ஆல்பம்: 'ஜெமினி ரைட்ஸ்' - ஸ்டீவ் லேசி
  • சிறந்த மாற்று இசை பர்ஃபாமன்ஸ்: 'சாய்சே லோன்ஜ்' - வெட் லெக்
  • சிறந்த மாற்று இசை ஆல்பம்: 'வெட் லெக்' - வெட் லெக்
  • சிறந்த ஆடியோ புக் (நரேஷன் அண்ட் ஸ்டோரி டெல்லிங் ரிக்கார்டிங்): 'ஃபைண்டிங் மீ' - வியோலா டேவிஸ்
  • சிறந்த பாரம்பரிய பாப் வோக்கல் ஆல்பம்: 'ஹையர்' - மைக்கேல் பபில்
  • சிறந்த கன்ட்ரி சோலோ பெர்ஃபாமன்ஸ்: 'லிவ் ஃபாரெவர்' - வில்லி நெல்சன்
  • சிறந்த கன்ட்ரி இரட்டையர்/குழு பெர்ஃபாமன்ஸ்: 'நெவர் வான்ட்டட் டூ பி தட் கேர்ள்' - கார்லி பியர்ஸ் மற்றும் ஆஷ்லே மெக்பிரைட்
  • சிறந்த கன்ட்ரி ஆல்பம்: 'டில் யூ கான்ட்' - கோடி ஜான்சன்
  • சிறந்த மியூசிக் வீடியோ: 'ஆல் டூ வெல்: தி ஷார்ட் ஃபிலிம்' - டெய்லர் ஸ்விஃப்ட்
  • புரொடியூசர் ஆஃப் தி இயர், நான் கிளாசிக்கல்: ஜாக் ஆன்டோனோஃப்
  • சிறந்த காமெடி ஆல்பம்: 'தி குளோசர்' - டேவ் சாப்பல்
  • சிறந்த மியூசிக்கல் தியேட்டர் ஆல்பம்: 'இன்டூ தி வூட்ஸ்(2022 பிராட்வே காஸ்ட் ரெக்கார்டிங்)'
  • சிறந்த மியூசிக் ஃபிலிம்: 'ஜாஸ் ஃபெஸ்ட்: எ நியூ ஆர்லியன்ஸ் ஸ்டோரி'
  • சிறந்த விஷுவல் மீடியா பாடல்: 'வீ டோன்ட் டாக் அபவுட் ப்ரூனோ' - லின் மேனுவல் மிராண்டா
  • சிறந்த ஜாஸ் வோக்கல் ஆல்பம்: சமரா ஜாய்
  • சிறந்த அமெரிக்கானா ஆல்பம்: 'இன் தீஸ் சைலன்ட் டேஸ்' - பிராண்டி கார்லில்
  • சிறந்த அமெரிக்கானா பெர்ஃபாமன்ஸ்: 'மேட் அப் மைண்ட்' - போனி ரைட்
  • சிறந்த அமெரிக்கன் டூட்ஸ் பாடல்: 'ஜஸ்ட் லைக் தட்' - போனி ரைட்
  • சிறந்த நடனம்/எலக்ட்ரானிக் ரெக்கார்டிங்: 'பிரேக் மை சோல்' - பியான்சே
  • சிறந்த மெட்டல் பெர்ஃபாமன்ஸ்: 'டீகிரேடேஷன் ரூல்ஸ்' - ஓஸி ஆஸ்போர்னே, டோனி ஐயோமி
  • சிறந்த இன்ஜினிடியர்டு, நான் கிளாசிக்கல் ஆல்பம்: 'ஹாரிஸ் ஹவுஸ்' - ஹாரி ஸ்டய்லெஸ்
  • சிறந்த கம்ப்பைலேஷன் சவுண்டு ட்ராக் ஃபார் விஷுவல் மீடியா- என்கான்டோ
  • சிறந்த ஸ்கோர் சவுண்டு ட்ராக் ஃபார் விஷுவல் மீடியா: 'என்கான்டோ' - ஜெர்மைன் பிராங்கோ

இதையும் படிங்க:மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.