ETV Bharat / international

Punctuality முக்கியம் பிகிலு! 10 நிமிட தாமதத்தால் 1,000 கி.மீ திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

author img

By

Published : Feb 24, 2023, 8:31 AM IST

Updated : Feb 24, 2023, 8:49 AM IST

10 நிமிடம் தாமதமாக நேரம் தவறி வந்த விமானம் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மீண்டும் திருப்பி விடப்பட்ட சம்பவம் ஜப்பானில் அரங்கேறி உள்ளது.

ETV BHarat
ETV BHarat

டோக்கியோ: நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் ஜப்பானியர்கள் கெட்டிக்காரர்கள் என்பதை உலகம் அறியும். அதற்கு உதாரணமாக சில நிமிடங்களில் ரயில் தாமதமாக வந்த காரணத்திற்காக, ரயில் ஓட்டி ஒட்டுமொத்த பயணிகளிடமும் மன்னிப்புக் கேட்டது, நேரம் தவறியதால் பாதிப்படைந்த பயணிகளுக்கு நஷ்டஈடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு கதைகள் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.

நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் கில்லாடிகளான ஜப்பானியர்கள், பொது மக்களுக்கு அநாவசியமாக இடையூறு ஏற்படுவதை தடுப்பதில் மேற்கொள்ளும் மெனக்கிடல்கள் குறித்த மற்றொரு உதாரணம் தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகின்றன. அது 10 நிமிடம் தாமதமாக வந்த விமானம் ஆயிரம் கிலோ மீட்டர் மீண்டும் திருப்பி விடப்பட்ட சம்பவம் தான் அந்த உதாரணம்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனடா விமான நிலையத்தில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இரவு புறப்பட்ட தனியார் விமானம், புகுவோகா விமான நிலையத்தை அடைய திட்டமிடப்பட்டு இருந்தது. ஹனடா விமான நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பல்வேறு பிரச்சினை காரணமாக ஏறத்தாழ 2 மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு மேல் புறப்பட்டுள்ளது.

இதனால் புகுவோகா விமான நிலையத்தை இரவு 10.10 மணிக்கு தாமதமாக சென்றடைந்தது. புகுவோகா விமான நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் விமானம் தரையிறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்த போதிலும், 10 நிமிடம் நேரம் தவறி வந்தது உள்ளிட்ட காரணங்களால் புகுவோகா விமான நிலைய நிர்வாகம் விமானத்தை திருப்பி அனுப்பியது.

இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு ஹனடா விமான நிலையத்திற்கு விமானம் வந்த நிலையில், விமானம் நிறுவனம் பரிந்துரைத்த அறைகளில் பயணிகள் தங்கவைக்கப்பட்டனர். இதையடுத்து மறுநாள் காலை அதே விமானம் மூலம் புகுவோகா விமான நிலையத்தை பயணிகள் அடைந்தனர்.

10 நிமிடம் தாமதமாக வந்த விமானத்தின் தவறுக்காக 335 பயணிகள் 5 மணி நேரம் அழைக்கழிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்கலீல் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் புகுவோகா விமான நிலையத்தின் அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பதன் காரணமாக இரவு 10 மணிக்கு மேல் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று விமான நிலைய பகுதியில் ஒலி மாசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டடுள்ளது.

அதனால் புகுவோகா விமான நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வானிலை பிரச்சினை உள்ளிட்ட முக்கிய காலங்களில் மட்டும் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால், 10 நிமிடங்கள் தாமதமாக வந்த விமானம் திருப்பி அனுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை சுற்றி உள்ள மக்கள் தொந்தரவுக்குள்ளாகக் கூடாது என்ற காரணத்திற்காக அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் மெனக்கிடல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: துருக்கியில் தொடரும் அவலம்! மீண்டும் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயர்வு!

Last Updated : Feb 24, 2023, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.