ETV Bharat / international

போர்நிறுத்தத்தை நீட்டிக்க நான்காவது கட்டமாக பணயக்கைதிகளை விடுவிக்க தயாராகும் இஸ்ரேல்-ஹமாஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 5:38 PM IST

Israel and Hamas prepare for fourth swap: திங்கட்கிழமையுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாக உள்ள நிலையில் நான்காவது கட்டமாக பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேலும் ஹமாஸும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

நான்காவது கட்டமாக பணயக்கைதிகளை விடுவிக்க தயாராகும் இஸ்ரேல் ஹமாஸ்
நான்காவது கட்டமாக பணயக்கைதிகளை விடுவிக்க தயாராகும் இஸ்ரேல் ஹமாஸ்

காசா: போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான பிறகு விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் ஒரு நாள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் கூறியிருந்த நிலையில் நான்காவது கட்டமாக பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தயாராகி வருகின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. இதன் பிறகு ஹமாசின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்திவந்தது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணயக்கைதிகளை விடுவிக்க நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அது போல இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு நாள் போர்நிறுத்தத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக , ஹமாஸ் 14 இஸ்ரேலியர்கள் மற்றும் மூன்று தாய்லாந்தை சேர்ந்த நபர்கள் உட்பட மேலும் 17 பணயக்கைதிகளை விடுவித்தது. இதற்கு பதிலாக 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் கைப்பற்றிய சுமார் 240 பணயக்கைதிகளில் 62 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போர் நிறுத்தமானத் திங்கட்கிழமைக்குப் பிறகு காலாவதியாகும் எனவும் அதன் பிறகு விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் ஒரு நாள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

இதையும் படிங்க: இஸ்ரேல் - ஹாமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி - பரஸ்பர இரு தரப்பு பணயக் கைதிகள் விடுதலை! எத்தனை பேர் தெரியுமா?

அதன்படி தற்போது நான்காவது கட்டமாக பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேலும் ஹமாஸும் தயாராகி வருகின்றன. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இந்த போர் நிறுத்தத்தை நீட்டிக்க நம்புவதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் காசாவிற்கு எரிபொருள் மற்றும் விநியோகங்கள் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த உதவிகள் காசாவில் உள்ள 2.3 மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு போதுமானதாக இல்லை என கூறப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து 13,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களே என்று காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அது போல இஸ்ரேல் தரப்பில் சேதமாக ஹமாஸின் ஆரம்ப ஊடுருவலின் போது 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இஸ்ரேலின் தரை வழி தாக்குதலின் போது சுமார் 77 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4 நாட்களுக்கு போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல் - 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.