ETV Bharat / international

இரண்டு இஸ்ரேலிய மூதாட்டிகளை பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 1:19 PM IST

Hamas frees two Israeli women: ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகளில் இரண்டு, வயது முதிர்ந்த இஸ்ரேலியப் பெண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

hamas frees two Israeli women
இரண்டு வயதான இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ரஃபா (காசா பகுதி): அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பினரால் 220 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில் மறைத்து வைத்திருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

காசாவில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 85 வயதான யோஷிதவ் லைஃப்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) மற்றும் 79 வயதான நூரித் கூப்பர் (Nurit Cooper) ஆகிய இரு வயதான இஸ்ரேலியப் பெண்களை, ஹமாஸ் அமைப்பினர் நேற்று (அக் 23) விடுதலை செய்துள்ளனர்.

  • 📢 We facilitated the release of 2 more hostages, transporting them out of #Gaza this evening.

    Our role as a neutral intermediary makes this work possible & we are ready to facilitate any future release.

    We hope that they will soon be back with their loved ones.

    — ICRC (@ICRC) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் இருவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (International Red Cross) ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த இருவரின் கணவர்கள் பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரிடமே உள்ளனர் என்றும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, "ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்த இருவரும், விரைவில் அவர்களின் அன்பிற்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்று நம்புகிறோம்" என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், "ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரானிய ஆதரவு போராளிகளால் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. வரும் நாட்களில் தாக்குதல்கள் அதிகரிக்க சாத்தியக் கூறுகள் உள்ளது குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலிய தோழமைகளுடன் தீவிரமான ராணுவ நடவடிக்கையின் விளைவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்" என்று தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி (National Security Council spokesman John Kirby) கூறியுள்ளார்.

இந்த நிலையில், காசா எல்லைப் பகுதியில் பீரங்கிகள் மற்றும் இஸ்ரேல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த கட்டங்களில் போர் படையினருக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட உள்ளதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. 2007இல் காசாவில் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்த ஐந்து போர்களில் தற்போது நடைபெறும் போர் மிகக் கொடூரமானது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.